ஒன்றை வருடமாக காதலித்த தேதியில் மாதா மாதம் மஹாலக்ஷ்மி கொடுத்த கிப்ட்ஸ் – பதிலுக்கு கிப்டுகளை வாரி இறைத்தாரா ரவீந்தர் ?

0
249
ravindar
- Advertisement -

சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனை முன்னாள் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் திருமணம் கழித்த செய்திகள் வெளியான போது சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

மேலும், வனிதா – பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார். தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வரும் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருப்பதாக புதிய ஷாக்கைகொடுத்து இருந்தார்.

- Advertisement -

Vj To சீரியல் நடிகை :

சின்னத்திரை சிரியலில் மிக பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

மஹாலக்ஷ்மி திருமண வாழ்க்கை :

இதனை தொடர்ந்து இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துஇருக்கிறார்.நடிகை மஹாலக்ஷ்மி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தேவதையை கண்டேன்” என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

-விளம்பரம்-

மஹாலக்ஷ்மி ஈஸ்வர் சர்ச்சை :

இந்த தொடரில் ஹீரோவாக ஈஸ்வரும், வில்லியாக மஹாலக்ஷ்மியும் நடித்து வந்தனர். இந்த தேவதையை கண்டேன் சீரியல் மூலம் மஹாலக்ஷ்மிக்கும், ஈஸ்வருக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது என்று ஈஸ்வர் மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்து இருந்தது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படி ஒரு நிலையில் தான் மஹாலக்ஷ்மி ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். ஒன்றரை ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த தன் மனைவிக்கு ரவீந்தர் பல பரிசுகளை அளித்து இருக்கிறாராம்.

ரவீந்தர் கொடுத்த பரிசுகள் :

குறிப்பாக தங்கத்திலான கட்டில், ரூபாய் 75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாளிகை போன்ற வீடு மற்றும் 300க்கும் மேற்பட்ட பட்டுப்புடவைகள், ஏராளமான நகைகள் போன்றவற்றை ரவீந்தர் கொடுத்து இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசிய ரவீந்தர் ”நாங்கள் இருவரும் காதலிக்க துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த ஒன்றரை ஆண்டுகளில் மகாலட்சுமி அவரது காதலை சொன்ன அந்த தேதியில் மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு பரிசை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். ஆனால் இதுவரை நான் அவருக்கு எந்த பரிசையும் வாங்கிக் கொடுக்கவில்லை.’

மஹாலக்ஷ்மி கொடுத்த பரிசுகள் :

என் ஆபீசில் இருக்கும் பாதி பொருட்கள் இந்த ஒன்றரை வருடத்தில் இவள் வாங்கி கொடுத்தது தான். நான் இவளுக்கு என்ன விலையுர்ந்த பரிசையும் வாங்கி கொடுக்க முடியும் ஆனால், அப்படி வாங்கிக் கொடுத்தால் என் காதலிக்கு வாங்கி கொடுத்தது போல ஆகிவிடும் நான் யோசித்தது என்னவென்றால் அவளை திருமணம் செய்து என்னுடைய மனைவிக்கு ஏதாவது பரிசு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான், மேலும் அப்படி அவள் ஆசைப்பட்டு ஒரு பரிசு நன்றாக மஞ்சள் கயிறில் தொங்க தொங்க தாலி கட்டிக் கொள்வது தான். அதனால் அதை தான் முதலில் பரிசாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement