அட, மஹாலட்சுமிக்கு தம்பி இருக்காரா – தனது அக்காவின் பிறந்தநாளில் வாழ்த்து சொல்லி அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
363
mahalakshmi
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக சென்று இருந்தது பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன்- நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் தான். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருந்தார். ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் மஹாலக்ஷ்மி, ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருந்தார். மேலும், தனக்கும் இது இரண்டாவது திருமணம் தான் என்று கூறி ரவீந்தர் ஷாக் கொடுத்தார். இவர்களது திருமண செய்தி வெளியானத்தில் இருந்தே சமூக வளைத்தளத்தில் இவர்கள் பெரும் கேலிக்கு உள்ளாகி இருந்தனர்.

- Advertisement -

ஆனால், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக துவங்கியனர். திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு பின் தனது மனைவி நேற்று கொண்டாடிய கொண்டாடும் முதல் பிறந்த நாளை ரவீந்தர் அவரது வீட்டிலேயே மிகவும் எளிமையாக கொண்டாடி இருந்தார் .

மேலும் இந்த பிறந்த நாளை ஆடம்பர கேக், காஸ்ட்லி கிப்ட், நண்பர்களுக்கு பார்ட்டி என்று ஆடம்பரம் செய்யாமல் மனைவிக்கு சிறிய கேக் மற்றும் ஒரு முழம் மல்லி பூவை பரிசாக அளித்து இருகிறார். அதே போல மஹாலக்ஷ்மி பிறந்தநாளுக்கு பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் மகாலக்ஷ்மியின் உடன் பிறந்த தம்பியும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதிலும் மகாலட்சுமியுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தையும் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு தன்னுடைய அக்காவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் மகாலட்சுமியின் தம்பி. தனது தம்பியின் இந்த வார்த்தை பார்த்து நன்றி சோட்டி, லவ் யூ என்று பதிவிட்டு இருக்கிறார் மகாலட்சுமி. இதுநாள் வரை மகாலட்சுமிக்கு இப்படி ஒரு தம்பி இருக்கிறார் என்பதை பலரும் அறிந்தராத ஒரு விஷயம்.

Advertisement