பணத்தை பாத்து கல்யாணம் பண்ணேனா ? என் அப்பா இந்த பிரபலம் தான். நான் மாதம் மட்டும் இவ்ளோ சம்பாதிக்கிறேன் – மஹாலக்ஷ்மி பதிலடி.

0
668
ravindar
- Advertisement -

சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரனை முன்னாள் தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் திருமணம் கழித்த செய்திகள் வெளியான போது சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் திருமணத்திற்கு பின்னர் முதல் முறையாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் பேட்டிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு பேட்டியில் பேசி இருக்கும் ரவீந்தர் அனைவரும் மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்பதை குறிப்பிட்டு செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-
mahalakshmi

ஆனால், உண்மையில் எனக்கும் இது இரண்டாம் திருமணம் தான். ஆனால் என்னுடைய முதல் திருமண வாழ்க்கையை பற்றி நான் பெரிதாக வெளியில் காட்டிக் கொள்ளாததால் பலருக்கும் அது தெரியவில்லை. மேலும், எங்கள் திருமணத்திற்கு பின்னர் சமூக வலைதளத்தில் வந்த பல்வேறு மீம்கள் மற்றும் Trollகளை பார்த்து இருக்கிறேன். அதில் ஒரு meme ஒன்றில் 90ஸ் ஹிட்ஸ் ரசிகர்கள் நாங்கள் ஒரு வாரம் ரூம் போட்டு அழ போகிறோம் என்று போட்டிருந்தனர். நீங்கள் அனைவரும் அவரை ரசித்துக்கொண்டு இருந்தீர்கள் நான் முயற்சி செய்து அவரை திருமணம் செய்து விட்டேன் அவ்வளவுதான்.

- Advertisement -

ரவீந்தர் – மஹாலக்ஷ்மி வயது வித்யாசம் :

மேலும், நான் ஏதோ சிறு வயது பெண்ணை திருமணம் செய்து விட்டது போல பேசுகிறார்கள். உண்மையில் எனக்கு 38 வயது மகாலட்சுமிக்கு 35 வயது. சொல்லப்போனால் நான் ஆன்ட்டியை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன் என்று வேடிக்கையாக பேசி இருந்தார்.மேலும் தனது திருமணம் குறித்து பேசிய மகாலட்சுமி ரவீந்தரை எனக்கு யார் என்று தெரியாது நான் முன்னறிவாளன் என்ற படத்தில் கமிட்டான போது ஒரு தயாரிப்பாளராக தான் ரவீந்தரை எனக்குத் தெரியும். எங்களின் முதல் சந்திப்பில் நான் அவரிடம் பெரிதாக பேசவில்லை.

ரவீந்தர் காட்டிய அக்கறை :

அதன் பின்னர் இவர் எனக்கு அடிக்கடி போன் செய்து என்னை பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பார். மேலும், என் மீதும் என் மகன் மீதும் மிகவும் அக்கறையாக பேசுவார். அது எனக்கு பிடித்துப் போனதால் நானும் அவரிடம் பேசினேன். மேலும் திடீரென்று ஒரு நாள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டார். ஆனால், நான் என்னைப் பற்றி என்ன உங்களுக்கு முழுதாக தெரியும் என்று மறுத்து விட்டேன். மேலும், என்னுடைய கடந்த காலம் பற்றி எல்லாம் தெரியுமா என்று கேட்டேன். அவரும் சரி சொல்லுங்கள் என்று சொன்னார்.

-விளம்பரம்-

ஒன்றறை வருட காதல் :

நான் என்னுடைய கடந்த காலத்தை பற்றி பேசிய உடன் மறுபடியும் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டார். நானும் சிறிது நாட்கள் யோசித்து விட்டு பின்னர் திருமணத்திற்கு சமாதித்து விட்டேன். நாங்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக காதலித்தோம். இது எங்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. நான் இவரை திருமணம் செய்து கொள்ள மற்றொரு முக்கிய காரணம் இவர் என்னை மட்டும் பார்த்துக் கொள்வதாக சொல்லாமல் என் மகனையும் பார்த்துக் கொள்வதாக சொன்னார் என் மகன் மீதும் மிகவும் அக்கரையாக இருந்தார்.

மேலும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்கள் குறித்து மகாலட்சுமியிடம் கேட்கப்பட்டது. அதிலும் குறிப்பாக பணத்திற்காக ஆசைப்பட்டு தான் மகாலட்சுமி ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார் போன்ற விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்டபோது. அதற்கு பதில் அளித்த மகாலட்சுமி ‘நான் வசதியான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய தந்தை மிகவும் பிரபலமான நடன இயக்க சங்கர் ஐயா தான். அவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி என்று பல மொழிகளில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும், பாகுபலி ஆர் ஆர் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார்.

பணத்திற்காக திருமணம் செய்தேனா :

மேலும் நானும் என்னையும் என் மகனையும் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு சம்பாதித்து வருகிறேன். இப்போதைக்கு மூன்று சீரியல்களில் நடித்து வருகிறேன். இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். என்னுடைய மாத வருமானம் மட்டும் 3 லட்சம். அப்படி இருக்கையில் நான் ஏன் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்ய வேண்டும். நான் இவரது குணத்தை பார்த்து தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

வாழ்வாதாரத்துக்கான பணத்தை பார்ப்பார்கள் :

மேலும், இது குறித்து பேசிய ரவீந்தர் மகாலட்சுமி என்னை பணத்திற்காக திருமணம் செய்து கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். உண்மையில் என்னைவிட ஒல்லியான, அழகான மற்றும் வசதியான நபர்கள் வேறு யாரும் சினிமா துறையில் இல்லையா. அப்படி என்றால் அவர்களை தானே மகாலட்சுமி திருமணம் செய்திருக்க வேண்டும். தற்போது இருக்கும் பெண்கள் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வாதாரத்துக்கான பணத்தை பார்ப்பார்களே தவிர, அதை மீறி ஒருவருடன் வாழ்க்கை முழுவதும் நன்றாக வாழ முடியுமா என்பதை யோசித்து தான் தங்களின் துணைகளை தேர்ந்தெடுப்பார்கள் அந்த அளவிற்கு தற்போது உள்ள பெண்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement