பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ரவீந்தர் கதறி அழுத செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டு உள்ளது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அதை அடுத்து முதல் வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் தர்ஷிகா வெற்றி பெற்று தலைவராகி இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 8:
பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் ஜாக்லின், ரவீந்தர், சௌந்தர்யா, முத்து, ரஞ்சித், அருண் ஆகியோர் இடம் பிடித்து இருக்கிறார்கள். பின் இந்த வாரம் ஆண்கள் vs பெண்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதற்குப்பின் டாஸ்கில் பெண்கள் மீது தான் நம்பிக்கை இருக்கு என்று பெண்கள் அணி, ஆண்கள் மீது தான் நம்பிக்கை இருக்கிறது என்று ஆண் தரப்பினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . இதற்கிடையில் ரவீந்தர்- ரஞ்சித் பயங்கரமாக சண்டை போடிருந்தார்கள். கடைசியில் அதை பிராங்க் என்று முடித்ததால் பெண்கள் அணியினர் ரொம்பவே கடுப்பாகி விட்டார்கள்.
நிகழ்ச்சி குறித்த தகவல்:
அதோடு ரவீந்தர் செய்த பிராங்கை எல்லோரும் டார்க்கெட் செய்து பேசி இருந்தார்கள். இதனால் கோபப்பட்ட ரவீந்தர் பயங்கரமாக கத்தி ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் பேசி இருந்தார். அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். இவரின் என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் சூடு பிடித்து இருக்கிறது. பின் சாச்சனா வெளியில் நடப்பதை பற்றியும், ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார். சாச்சனா என்ட்ரி வேற லெவலில் இருக்கிறது.
ஆர்ஜே அனந்தி வைத்த குற்றச்சாட்டு:
நேற்று எபிசோட்டில், விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் முதல் வாரத்தின் அனுபவத்தை குறித்து கேட்டிருந்தார். அப்போது ரவீந்தர் செய்த பிராங்க் குறித்து பேசுகையில் ஆர்ஜே ஆனந்தி, ரவீந்தர் மற்றும் ரஞ்சித் இருவரும் சண்டை போடும்போது அது டிராமாவாக இருக்கும் என்றுதான் முதலில் நினைத்தேன். பொதுவாக ரவீந்தர் உட்கார்ந்து கொண்டே இருப்பார். அவருக்கு தண்ணி வேணும்னா கூட நாங்க தான் எடுத்து கொடுப்போம். எப்பவும் எழுந்து நிக்காத மனுஷனுக்கு பிராங்க் மட்டும் எழுந்து நின்று செய்தார். அதனால், அதை செய்ய முடிந்த அவர் எங்களிடம் வேலை வாங்கும் போது எங்களை பயன்படுத்தி கொண்டார் என்று தோன்றியது என்று விஜய் சேதுபதியிடம் கூறினார்.
அழுத ரவீந்தர்:
பின்பு விஜய் சேதுபதி ஷோ முடித்துவிட்டு சென்ற பின், நான் கால் வலிக்கிறது என்பதால் தான் கேட்டேன். நான் உட்கார்ந்து கொண்டு வேலை வாங்குகிறேன் என சொல்கிறார். அதைக் கேட்கும் போது எனக்கு கஷ்டமாக இருந்தது. என் மனைவி மகாலட்சுமி அப்போதே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும்னு என்று ரவீந்தர் கண்ணீர் விட்டார். பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.