உங்களால தான் ஒக்காரவே முடியல உங்களுக்கு எதுக்கு பிக் பாஸ்ன்னு கேட்டவர்களுக்கு- ரவீந்தர் வெளியிட்ட முதல் வீடியோ

0
273
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த உடன் ரவீந்தர் போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஒன்பது நாள் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.

-விளம்பரம்-

இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக நாமினேஷன்களை சாச்சனா பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். பின் முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்தது. அதோடு கடந்த வாரம் ரவீந்தர் செய்த பிராங் தான் அதிகமாக பேசப்பட்டு இருந்தது. ஒரு கட்டத்தில் ரவீந்தர் பயங்கரமாக கத்தி ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும் பேசி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 8:

அதன் பின் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். கடைசியில் ரவீந்தர் தான் முதலில் நிகழ்ச்சியை விட்டு வெளியே போனார். ரவீந்தரும் எந்த வருத்தமுமே இல்லாமல் ஜாலியாக வெளியே வந்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு விஜய் சேதுபதியை பார்த்து ரவீந்தர், செஞ்சிட்டிங்க சார் என்று பேசி இருந்தார். பின் விஜய் சேதுபதி, உங்கள் ஸ்டைலில் போட்டியாளர்களுக்கு ரிவியூ கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு ரவீந்தர், ஒவ்வொரு போட்டியாளர்களை பற்றியும் புட்டு புட்டு வைத்திருந்தார்.

ரவீந்தர் வீடியோ:

இந்நிலையில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு ரவீந்தர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், அனைவருக்கும் வணக்கம். உங்கள் fatman உங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோஷம். இது பிக் பாஸை பற்றி பேசும் வீடியோ கிடையாது. அதற்கான விஷயங்கள், உங்களுடைய பல கேள்விகள், சந்தேகங்கள் எல்லாத்தையும் பின்னாடி பேசலாம். இது முழுக்க முழுக்க ஒரே காரணம் தான் நன்றி சொல்லும் வீடியோ.

-விளம்பரம்-

வீடியோவிற்கான காரணம்:

இந்த ஏழு நாளில் நான் ரொம்ப நேர்மையாக விளையாடி இருந்தேன். அதற்கு என்னுடைய முழு ஒத்துழைப்பையும் போட்டேன். அதற்கு உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி, இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த விமர்சனம் செய்தும் , அதற்கான சண்டைகள் எல்லாம் போட்டு ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்த எல்லாருக்குமே ரொம்ப நன்றி. இந்த நன்றி என்பது வெற்றி பெற்ற மத்த போட்டியாளர்கள், எனக்கு ஓட்டு போடாமல் அநியாயம் செய்த உங்களுக்கும் ரொம்ப நன்றி. இந்த விளையாட்டை நான் சிறப்பாக விளையாடி முடித்தேன்.

விமர்சனம் குறித்து சொன்னது:

அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இதை தாண்டி இது ரொம்ப வித்தியாசமான பயணம். உள்ளே நடந்த அனைத்து நிகழ்வுகளும் நன்றாக இருந்தது. நீங்கள் பார்க்காத நிலை இருக்கிறது. நான் பேசுவதற்கும் நிறைய இருக்கு. இந்த மனுஷன் லைவில் இப்படி பேசி பார்க்கவில்லையே, இவரை ஏன் அவர் காப்பாற்றினார்? உங்களால தான் ஒக்காரவே முடியல எதுக்கு பிக் பாஸ்? உங்களுக்கு மூச்சே விட முடியல அப்புறம் ஏன்? இப்படி எல்லா கேள்விகளையும் ரெடியா வைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் சரியா நேரத்தில், சரியான முறையில் உங்கள் எல்லோருக்கும் புரியிற மாதிரி வாயிலேயே ஒரு குறும்படம் போட்டு காட்டுகிறேன். இது முழுக்க முழுக்க என்னை விமர்சித்தவர்களுக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வீடியோ தான் என்று கூறி இருக்கிறார்.

Advertisement