மூத்த மருத்துவர்கள் வரும் முன்னரே டிஸ்சார்ஜ் தீப்பெட்டி கனேசனின் மரணத்திற்கு காரணம் என்ன தெரியுமா ?

0
2317
- Advertisement -

சினிமாவை பொறுத்து வரை அனைவருக்கும் வாழ்க்கை சரியாக அமைந்துவிடுவது இல்லை. குறிப்பாக எத்தனையோ துணை நடிகர்களின் நிலை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கதைகளை நாம் பலவற்றை கேட்டுள்ளோம். அந்த வகையில் சமீபத்தில் தீப்பெட்டி கணேசனின் நிலையை கண்டு திரையுலக பிரபலங்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ் சினிமா உலகிற்கு ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். தீப்பெட்டி கணேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை அனைவரும் தீப்பெட்டி கணேசன் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா செய்யும் பணியில் சேர்ந்தார். பின் இவர் உடலில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இவர் வேலைக்கு செல்ல முடியாமல் அன்றாட பிழைப்பிற்கு தவித்து வந்தார்.

- Advertisement -

தீப்பெட்டி கணேசனுக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து வறுமையில் வாடி வரும் தீப்பெட்டி கணேசனுக்கு கொரோனா லாக்டவுனில் எந்த வித வருமானமும் இல்லாததால் ஒரு வேளை உணவிற்கு மொத்த குடும்பமும் தவித்துவந்தது . இந்த தகவலை அறிந்த நடிகர் விஷால் அவர்கள் ஒரு மாதத்திற்கான மளிகை சாமான் அனுப்பிவைத்து இருந்தார். அதற்க்கு நன்றி கூறி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து லாரன்ஸ், சினேகன் , விஷால் என்று பலர் உதவி செய்த்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் உடல் நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இப்படி ஓர் நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். கொரோனா ஊரடங்கள் வேலையின்றி தவித்து வந்துள்ள தீப்பெட்டி கணேசன், குடும்பத்தை காப்பாற்ற பாராட்டோ கடையில் வேலை செய்துள்ளார். மேலும், கிடைக்கின்ற வேலைகளை எல்லாம் பார்த்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த மருத்துவர்கள் வரும் முன்னரே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு காலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement