CWC வில் இருந்துவிலகி விட்டேனா? – ஓட்டேரி நரி கண்ணீர் மல்க பேட்டி.

0
1538
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்கிய நிலையில் அதில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட ஓட்டேரி சிவா தற்போது செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்த போது குக் வித் கோமாளி படத்தில் இருந்து விலகியது குறித்து கூறியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 4 :

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர். இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏனெற்றால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவதினால் அவர்களுக்கு பதிலாக ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.

நீக்கப்பட்ட ஓட்டேரி சிவா :

இந்த நிலையில் குக் வித் கோமாளியில் புதிதாக கலந்து கொண்ட ஓட்டேரி சிவா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது குடித்து விட்டு வருவதாகவும், நிதானம் இல்லாமல் செயல்வடுவதினால் விஜய் டிவி ஓட்டேரி சிவாவை நீக்கியதாக தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும் இவருக்கு பதிலாக வேறொரு விஜய் டிவி பிரபலம் கலந்து கொள்ள இருபக்கவும் தகவல் கிடைத்து. இந்நிலையில் தான் ஓட்டேரி சிவா சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

மற்றவர்களுக்கு பொறாமை :

அந்த பேட்டியில் தொகுப்பாளர் நீங்கள் குடித்துவிட்டு நடிப்பதினால் தான் உங்களுக்கு பல வாய்ப்புகள் கைநழுவி போனதாக செய்தி பரவுவதை பற்றி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஓட்டேரி சிவா நான் குடிக்க மாட்டேன் சாப்பாடு எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன். நான் பிரபலமாகி அதிகமாக சம்பாரிக்கிறேன் என்று அவர்களுக்கு பொறாமை அதனால் தான் அப்படி கூறுகின்றனர். நான் மது அருந்த மாட்டேன் அவர்கள் சொல்வது பொய் என்று கூறினார்.

என்னை நீக்கவில்லை :

மேலும் தான் இப்போது விஷால் அவர்களுடன் தான் இருந்து வருவதாக கூறிய அவரிடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓட்டேரி சிவா என்னை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வில்லை, விரைவில் அழைக்கிறோம் என்று கூறியுள்ளனர் என்றும் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் படியும் பொய் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

Advertisement