தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சதா. அதன் பின்னர் விக்ரம், அஜித், மாதவன் என்று முன்னனி நடிகர்களுடன் நடித்துவந்தார். பல புது முக நாயகிகளின் வருகையால் பட வாய்ப்பை இழந்த சதா கடைசியாக வடிவேலு நடித்த ‘எலி ‘ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகை சதா, தற்போது இயக்குனர் மஜித் இயக்கும் ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை ரித்விகா, தினேஷ்குமார், சுஜாதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்க :
நடிகை சதா ‘டார்ச்லைட் ‘ படத்தில் ஒரு விலை மாதுவாக நடிக்கிறார். இந்நிலையில் பேட்டி போன்றில் பங்குபெற்ற நடிகை சதாவிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்துள்ள நடிகை சதா, திருமணம் குறித்து இப்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை. எனது வாழ்வில் எனக்கு ஏற்ற ஒரு நபரை நான் இதுவரை சந்தித்து இல்லை. அப்படி ஒருவரை சந்தித்தால் நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சதாவிற்கு தற்போது 34 வயதாகிறது, அதே போல அவர் திரையுலகிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வருகிறார் நடிகை சதா. ஒருவேளை சதா எதிர்பார்க்கும் நபரை போல விரைவில் யாரேனும் அவர் சந்தித்தால் விரைவில் டும் டும் டும் தான்.