‘3 இடியட்ஸ்’ ல் நடித்துவிட்டு ‘நண்பன்’ படத்தில் மட்டும் நடிக்காதது ஏன் ? மாதவன் சொன்ன விளக்கம் (நியாயமா தான் படுது)

0
707
madhavan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

நடுவில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் பிறகு படங்களில் அதிககவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

மாதவன் நடிக்கும் படம்:

தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்கிற்கு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாதவன் உடைய பழைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வேட்டை படம் :

அது என்னவென்றால், வேட்டை படத்தின் போது நடந்த விழாவில் மாதவன் அளித்த பேட்டி வீடியோ. 2012ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் வேட்டை. இந்த படத்தில் ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலா பால் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் போது நடிகர் ஆர்யா மற்றும் மாதவன் பேட்டி ஒன்று அளித்திருந்தார்கள். அதில் மாதவன் அவர்கள் இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து எடுத்திருந்தார்கள்.

-விளம்பரம்-

மாதவன் அளித்த பேட்டி வீடியோ:

ஆனால், அந்த படத்தில் மாதவன் தமிழில் நடிக்கவில்லை. தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் தான் மாதவன் இந்தியில் நடித்து இருந்தார். தமிழில் நண்பன் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று அசோக் செல்வன் கேட்டு இருந்தார். அதற்கு ஆர்யா அவர்கள் மாதவன் இங்கிருந்து அங்கு போய் நடிப்பார். ஆனால், அங்கிருந்து இங்கு நடிக்க மாட்டார் என்று கிண்டல் செய்தார். உடனே மாதவன் அப்படியெல்லாம் இல்லை. நண்பன் படத்தின் போது என்னுடைய வயது 41 மேல் வந்து விட்டது. கல்லூரி மாணவராக நடிக்கும் வயதில்லை. அதனால் தான் நான் நடிக்கவில்லை.

நண்பன் படத்தில் நடிக்காத காரணம்:

இனி வரும் படங்களிலும் சாக்லேட் பாய் என்ற எண்ணத்தை மாற்றி கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இப்படி மாதவன் கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உண்மையை சொல்லப்போனால் சமீப காலமாகவே மாதவன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவர் மேல் இருந்த சாக்லேட் பாய் என்ற எண்ணம் மாறி ஒரு சிறந்த நடிகர் என்ற பெயர் பெற்று தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வேட்டை படத்தின் போது மாதவன், ஆர்யா இருவரையும் பேட்டி எடுத்தது நடிகர் அசோக் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement