10 வருஷம் குழந்தை இல்லாத காரணம் இது தான்.! அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சான்றா.!

0
2265
Sandra
- Advertisement -

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார்.  

-விளம்பரம்-

திருமணம் ஆகி 10 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாக இருக்கும் சான்ரா ஏன் இத்தனை காலமா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், எங்களிடம் பல பேர் இது தான் உங்கள் முதல் குழந்தையா என்று கேட்கின்றனர். அதற்கு முக்கிய காரணமே நான் ஒரு குழுந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டது தான். அது எங்கள் தோழி ஒருவரின் குழந்தை படுபாவிங்க அந்த கொழந்தையை எங்க குழந்தையா ஆகிட்டாங்க. அதே போல 10 வருடம் ஏன் குழந்தை பெத்துக்களனு கேக்குறாங்க.

- Advertisement -

சில பேர் எங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் பிரச்னை என்று கிளப்பிவிட்டனர். மேலும், சில பேரோ நாங்கள் விவாகரத்து செய்யபோவதாக கூட கிளப்பி விட்டனர். ஆனால், உண்மை என்னவெனில் நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டதால், பண உதவி மற்றும் ஆறுதல் சொல்ல கூட துணைக்கு யாருமே இல்லை. எங்களிடம் இருந்த சில பழைய உடைகளை மட்டுமே கொண்டுவந்து தான் எங்கள் வாழ்க்கையை துவங்கினோம்.  எங்களை காப்பாற்றி கொள்ள இத்தனை வருடங்கள் வேலை, வேலை என ஓடியதால் குழந்தை பற்றி யோசிக்க முடியவில்லை. ப்

ரஜின் வேலை இன்றி சில காலம் இருந்தார். அதே போல நானும் எனது வேலையில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுக்க முடிவெடுத்தேன். ப்ரஜின் தற்போது சின்னத்தம்பி சீரியல் மூலம் அவருக்கு நல்ல பிரேக் கிடைத்துள்ளதால், நாங்கள் குழந்தை பெற முடிவெடுத்தோம். எங்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்க போகிறது அதனால் இனி இதுபோன்ற கேள்விகளை கேட்காதீர்கள். குறிப்பாக மீடியா நபர்கள் இனி இத படிக்காம போட்டோ மட்டும் பாத்து புது
போஸ்ட் போட்ராதீங்க, கொழந்தை பிறந்துடிச்சினி என்று பதிவிட்டுள்ளார் சான்றா.

-விளம்பரம்-
Advertisement