விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது ஏன்? பின்னணி இதுதான் – படத்துல இவ்ளோ நேரம் வருவாராம்.

0
293
vikram
- Advertisement -

விக்ரம் படத்தில் சூர்யா நடித்ததற்கான பின்னணி காரணம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் திகழ்ந்து கொண்டு வருகிறார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விக்ரம் என்ற படத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் இந்தியாவின் மிக பிரபலமான கலைஞர்களான கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சிறப்பு வேடத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

விக்ரம் படம் குறித்த தகவல்:

அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15 ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா:

மேலும், விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு விஷயங்களை பல பிரபலங்கள் பேசி இருந்தார்கள். விழாவில் விக்ரம் பட டிரைலர் வெளியாகி இருந்தது. இது 2நிமிடம் 39 வினாடிகள் ட்ரெய்லர் போடப்பட்டிருந்தது. ட்ரெய்லரில் கமலஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூவருக்கும் இடையேயான சண்டையை காட்டி இருந்தார்கள். சிங்கம், புலி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகள் மான்களை வேட்டையாடும் போர்க்களத்தை ஒப்பீட்டு பின்னணியில் கதையை கொடுத்து இருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

சூர்யா கதாபாத்திரம் குறித்த தகவல்:

கமலின் கர்ஜனை, பகத் பாஸில்- விஜய் சேதுபதி மிரட்டல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எல்லாத்தையும் விட இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்து இருப்பது பயங்கர ஹைலைட்டாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் சூர்யா இடம்பெறும் காட்சிகள் சஸ்பென்ஸ் கொடுக்கும் விதமாக காட்டப்பட்டுள்ளது. அதனை ரசிகர்கள் கண்டுபிடித்து சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து சோஷியல் மீடியாவில் கேள்வி எழுப்பி கொண்டே வருகின்றனர். ஆனால், படக்குழு இதனை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். மேலும், திரைக்கதையிலும் சூர்யாவின் என்ட்ரி மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு நாள் சூட்டிங்கில் கலந்து கொண்ட சூர்யாவின் காட்சிகள் 10 நிமிடங்கள் வரை படத்தில் காட்டப்படுகிறது.

சூர்யா நடிக்க காரணம்:

மேலும், படத்தில் நடிக்க வருமாறு கமல் அழைப்பு கொடுத்த உடனே சூர்யா மறுப்பு தெரிவிக்காமல் நடித்துக் கொடுத்தாராம். ஆனால், ஏன் கமல் படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டார் என்ற கேள்வியும் சோசியல் மீடியாவில் எழுந்திருந்தது. இந்நிலையில் இதற்கான பதில் தற்போது வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், கமலை தனது குருவாக சூர்யா கருதுகிறாராம். அதன் காரணமாகத் தான் வாய்ப்பு கேட்கும் போதெல்லாம் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது. மன்மதன் அம்பு படத்தில் கூட சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement