ரஜினியுடன் நடித்த நதியா, கமலுடன் நடிக்க மறுக்க காரணம் இது தான் (நீங்க எதிர்பார்த்த காரணம் தான்)

0
262
nadhiya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நதியா. இவருடைய இயற்பெயர் சரீனா அனூஷா. இவர் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பின் 2004 ஆம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருடைய பூர்வீகம் கேரளா. அப்பா என்.கே.மொய்து. கேரளாவின் தல சேரியை சேர்ந்த முஸ்லிம். அம்மா லலிதா திருவல்லாவை சேர்ந்த இந்து. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும், 1984 ஆம் ஆண்டில் பாசில் தனது நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார்.

-விளம்பரம்-

ஷரீனா மொய்து என்ற இவரது பெயர் சினிமாவுக்கு சரியாக இருக்காது என்று நதிபோல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் நதியா என்று இவருக்கு பெயர் வைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக மாறியது. மேலும், நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் மோகன்லால் நடித்திருந்தார். அதனை தான் தமிழில் பூவே பூச்சூடவா என்ற பெயரில் பாசில் ரீமேக் செய்தார். இந்த படம் வெளியாகும் முன்பே மலையாளத்தில் நதியா பல படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

90ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னி :

இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே நதியா ஆண்களின் மனதில் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் புகழ் பெற்றார். நதியாவின் கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு, நவநாகரிக உடைகள், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் பெண்கள் மத்தியில் பேசு பொருளானது. அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்தில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லித் தான் பொருள் விற்பார்கள். அந்த அளவிற்கு நதியா மிக பிரபலமான நடிகையாக இருந்தவர். பின் இவர் 1988 ஆம் ஆண்டு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

எவர் கிறீன் நடிகை :

இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண்கள் உள்ளனர். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் நதியா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் பெண்களிடையே உடைக்காவும், ஸ்டைலாக்கவும், தோற்றத்துக்காகவும் புகழ் பெற்ற முதல் நடிகை என்ற பெயர் எடுத்தவர்.

-விளம்பரம்-

கமலுடன் நடிக்க மறுத்த நதியா :

இந்த நிலையில் முத்தத்திற்கு பயந்து நதியா கமலுடன் நடிக்க மறுத்த காரணம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நதியா. ஆனால், கமல் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்ததை மறுத்துவிட்டார். இது அப்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கர பேசுபொருள் ஆனது. அப்போது கமல் காதல் இளவரசனாக கொடிகட்டி பறந்தவர். அவர் படத்தின் பாடல் காட்சிகளும் காதல் காட்சிகளும் பயங்கர பிரபலம். அவர் திரையில் நெருங்கி உணர்வுபூர்வமாக நடிக்கக் கூடியவர். அதிலும் கமலின் நடிப்பில் வெளிவந்த பாடல்களும், நெருக்கமான கட்சிகளும் இளசுகள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது.

முத்த ஸ்பெஷலிஸ்ட் கமல் :

அதேபோல் புன்னகை மன்னன் படத்தில் ரேகாவுக்கு கமல் கொடுத்த முத்தத்தை வியந்து பேசியிருந்தார்கள். ஊடகங்கள் முழுவதும் கமலுடைய நடிப்பும் நெருக்கமான காட்சிகள் பற்றி தான் பேசப்பட்டிருக்கிறது. மேலும், கமல் தன்னுடன் நடிப்பவர்களின் உதடுகளில் எதிர்பாராத நேரத்தில் முத்தமிடுவார் என்பது போன்ற கிசுகிசுக்களும் வந்திருந்தனர். கமல் படம் என்றாலே முத்தம் உறுதி என்ற நிலையில் கமலுடன் நடிக்க வந்த வாய்ப்பை உதறினார் நதியா. முத்த பயத்தினால் தான் கமல் உடன் நடிக்க மறுத்ததாக நதியாவே அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

Advertisement