மலையாளத்தில் பேசுவதற்கு தயங்கும் நடிகை சாய் பல்லவி- அவரே சொன்ன விஷயம் இதோ

0
161
- Advertisement -

பிரபல நடிகை சாய் பல்லவி குறித்த செய்திகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்.

-விளம்பரம்-

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பின், கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்றுதான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். தற்போது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சாய் பல்லவி திரைப்படம்:

அதிலும், சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்த ‘விரத பருவம்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த படம் ‘கார்கி’. இந்தப் படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியிருந்தார். சாய் பல்லவியுடன் காளி வெங்கட், ஆர். எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்த இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. குறிப்பாக இப்படத்தில் சாய்பல்லவி நடிப்பை அனைவரும் பாராட்டி இருந்தார்கள்.

அமரன் படம்:

தற்போது சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் தனது இன்னுயிரை நீத்த சென்னையைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு படம்.

-விளம்பரம்-

சாய் பல்லவியை பாராட்டுகிறார்கள்:

இந்தப் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி, இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு இப்படம் வெளியாகி தற்போது ஐந்து நாட்களை கடந்துள்ள நிலையில், 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

மலையாளத்தில் பேச பயம்:

இதனிடையே இப்படம் வெளியாவதற்கு முன்பு கொச்சியில் படக்குழு பிரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது பேசிய சாய் பல்லவி, மலையாளத்தில் பேச பயமாக இருப்பதாக கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மலையாளத்தில் பேச எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒருவேளை நான் தெரியாமல் ஏதாவது தவறாக பேச, அது உங்களை காயப்படுத்தி விடுமோ என்று கவலைப்படுகிறேன். நான் எப்பொழுதும் சரியாக பேச வேண்டும் என்று தான் விரும்புவேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement