விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அல்டிமேட் ஸ்டார் அஜித் தனது 59 வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தை சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் படங்களை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைகிறார். இந்த படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த ‘பிங்க்’ படத்தில் ரீமேக் என்பது அனைவருக்கு தெரியும்.
இதையும் படியுங்க : வாக்குவாதம் செய்த தோனி.! 2.2 விதி பாய்ந்தது.! அபராதம் எவ்வளவு தெரியுமா.!
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தை பார்த்து விட்டு போனி கபூர், அஜித்தை இந்தியில் நடிக்க வைக்கவும் ஆசைப்பட்டார். படப்பிடிப்புகள் முடிந்தாலும் அடிக்கடி படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அஜித்துடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அவர் யார் என்று பலரும் யோசித்து வந்த நிலையில் அவர் ஒரு நடன கலைஞர் என்பது தெரியவந்த்துள்ளது. அவர் விஜய், விக்ரம் என பல நடிகர்கள் படங்களில் இவர் நடனமாடியுள்ளார்.