‘உக்ரைன் அகதிகளுக்கு உதவ வேண்டும்’ என்று உலகத் தலைவர்களுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா வலியுறுத்தியுள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஒட்டுமொத்த உலகையே உலுக்கி கொண்டிருக்கும் சம்பவம் உக்ரைன் – ரஷ்யா பிரச்சனை. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் கலவரத்தால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படும் உயிரிழந்து வருகின்றனர். இதனால் பிற நாடுகளும் போரை நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உக்ரைனுக்கு படப்பிடிப்பிற்கு சென்ற பல இந்திய மக்களும் பயத்தின் காரணமாக திரும்பி வந்திருக்கிறார்கள். நாடு முழுவதும் உக்ரைன் பிரச்சனை பயங்கர சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது இந்த போர் சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், உக்ரைன் பிரச்சினை குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் உக்ரைன் அகதிகளுக்கு உதவ வேண்டும் என உலகத் தலைவர்களுக்கு பிரியங்கா சோப்ரா வலியுறுத்தியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை பிரியங்கா சோப்ரா அவர்கள் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கிறார். இவர் அவ்வப்போது உலக நடப்பு நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவிப்பது வழக்கம்.
உக்ரைன் குறித்து பிரியங்கா சோப்ரா கூறியது:
அந்த வகையில் தற்போது உக்ரைனில் தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பான கருத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ள அகதிகளுக்கு உலக தலைவர்கள் உதவ வேண்டும். அகதிகளுக்கு ஆதரவாக உலக தலைவர்கள் நிற்க வேண்டும். இதை எல்லாம் சும்மா எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.
வைரலாகும் பிரியங்கா சோப்ரா வீடியோ:
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு குழந்தைகள் அதிக அளவில் இடம் பெயர்ந்து இருப்பதில் இதுவும் ஒன்று. மேலும், உக்ரைன் குழந்தைகளுக்கு உதவுவதற்காக தன்னோடு இன்ஸ்டாவில் யுனிசெப் நன்கொடை விபரம் இணைப்பை பகிர்ந்து உள்ளார் பிரியங்கா சோப்ரா. இப்படி பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டா வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர் இந்தியாவை சேர்ந்த பல பிரச்சினை குறித்து ஏன் குரல் எழுப்பவில்லை? என்று கேள்வி எழுப்பத் தொடங்கினர். அதிலும் சிலர் இந்திய படங்களில் நடித்து சர்வதேச நடிகை ஆகிவிட்டதால் தற்போது அவர் சர்வதேச பிரச்சினைகள் மட்டும் தான் பேசுவார் என்றும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
ப்ரியங்காவின் பதிவை விமர்சித்த ரசிகர்கள்:
மேலும், இந்தியாவில் மைனாரிட்டி மக்களும் தலித் மக்களும் பாதிக்கப்படுவது குறித்து ஏன் பேசியது இல்லை? என்று பலரும் பிரியங்கா சோப்ராவை விமர்சித்து வருகின்றனர். இப்படி இந்த வீடியோவை விமர்சித்து ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வரும் கமெண்ட் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்தார்.
பிரியங்கா சோப்ரா திரைப்பயணம்:
பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார் பிரியங்கா சோப்ரா. அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.