ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தாங்கள் வெளியிட்ட படங்களை ட்விட்டரில் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாமே வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் நெஞ்சுக்கு நீதி.
இந்த படம் பல சமூக கருத்துக்களை முன்வைத்து இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து உதயநிதி அவர்கள் மாமன்னன் போன்ற சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இந்த நிறுவனம் பிரபல நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது.
இதையும் பாருங்க : பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் டேட்டிங் சென்றுவரும் நாக சைத்னயா ? இரண்டாம் திருமணத்துக்கு ரெடியோ ?
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட படங்கள்:
இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் எப்ஐஆர் , எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட், காத்துவாக்குல 2 காதல், டான், நெஞ்சுக்கு நீதி போன்ற பல பிரபலங்களின் படங்களை வெளியிட்டு இருக்கிறது. தற்போது கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் விக்ரம் பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் டீவ்ட்:
தமிழகத்தில் உள்ள ஆயிரம் தியேட்டர்களில் பாதிக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்ட படங்களே ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தாங்கள் வெளியிட்ட படங்களை ட்விட்டரில் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்து இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அதாவது, இந்த ஆண்டில் தற்போது வரை தமிழகத்தில் 6 படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பதிவிட்ட டீவ்ட்:
வரும் நாட்களில் சில படங்களை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த நிலையில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படங்களின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர்கள் எனக்கூறி முக்கிய பணியாளர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து இருக்கிறது. அதில் எஃப்ஐஆர், காத்துவாக்குல 2 காதல், டான், நெஞ்சுக்கு நிதி, விக்ரம் உள்ளிட்ட படங்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.
பீஸ்ட் படம் இடம் பெறாத காரணம்:
ஆனால், விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பெயர் இடம்பெறவில்லை. இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இவர்கள் விஜய் படத்தின் பெயர் டுவிட்டரில் போடாததுக்கு காரணம் பீஸ்ட் படம் தோல்வியா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். ஆனால், விஜய்யின் பீஸ்ட் படம் முதல் நாள் உலக அளவில் 60 கோடியை வசூலித்தது. வசூல் ரீதியாக பீஸ்ட் படம் வெற்றி படமாக அமைந்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.