ஜீவி நாயகன் நடித்துள்ள Red Sandal Wood படம் எப்படி இருக்கிறது ? முழு விமர்சனம் இதோ.

0
384
- Advertisement -

இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரெட் சாண்டல் வுட். இந்த படத்தில் வெற்றி, தியா, கே ஜி எஃப் ராம், எம் எஸ் பாஸ்கர், மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராமன், கபாலி விஸ்வந்த், கல்லூரி வினோத் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷாம் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பார்த்தசாரதி தயாரித்திருக்கிறார். செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் உருவாகி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஹீரோ வெற்றி குத்து சண்டை வீரராக இருக்கிறார். இவருடைய நண்பர் கபாலி விஸ்வந்த். இவர் சென்னை வியாசர்பாடி சேர்ந்த பட்டதாரி இளைஞர். இவர் சட்டத்திற்கு புறம்பாக செம்மர கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார். இவரை தேடி ஹீரோ வெற்றி ஆந்திர மாநிலத் திருப்பதியில் அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது இவர் செம்மர கடத்தல் கும்பல் இடம் தான் இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

- Advertisement -

படத்தின் கதை:

மேலும், இந்த செம்மர கடத்தல் கும்பலையும், அரசியல்- அதிகாரம், பணபலம் உள்ள ஒருவன் தான் ஆள்கிறான் என்பதை ஹீரோ கண்டுபிடிக்கிறார். அதை தொடர்ந்து அந்த கும்பலை எதிர்த்து தன் நண்பனை மீட்க தனியாகவே ஹீரோ வெற்றி கிளம்புகிறார். இறுதியில் அவர் தன்னுடைய நண்பனை மீட்டாரா? கடத்தல் சாம்ராஜ்யத்திற்கு முக்கிய புள்ளியை வைத்தாரா? குற்றவாளிக்கு தண்டனை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை

அரசியல் அதிகாரத்திற்கு பின்னால் பலியாகும் ஏழைத்தமிழர்களுடன் வலி என்ன என்பதை இந்த படத்தில் இயக்குனர் அழகாக காண்பித்து இருக்கிறார். கதாநாயகனாக வரும் வெற்றி முதல் பாதியில் அப்பாவித்தனமாக இருந்து இரண்டாம் பதில் ஆக்க்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் அவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கதாநாயகியாக வரும் திய சில காட்சிகளில் தான் வருகிறார். படத்தில் இவருடைய பங்கு என்னவென்றே தெரியவில்லை? கதாநாயகி படத்திற்கு வேண்டுமென்று இயக்குனர் காண்பித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இவர்களை அடுத்து வரும் கேஜிஎப் ராம், கபாலி விஸ்வந்த், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். செம்மர கடத்தலுக்கு பின்னால் உள்ள அரசியல், வனத்துறை, ரவுடிகள் கூட்டணி ஆகியவற்றை இயக்குனர் சிறப்பாக கொடுக்க முயற்சித்து இருக்கிறார். முதல் பாதி பொறுமையாக சென்றாலும் இரண்டாம் பாதி வேக வேகமாக செல்கிறது. இதனால் பல காட்சிகள் என்ன என்று புரியாத அளவிற்கு சென்றிருக்கின்றது.

நண்பனுக்காக படம் முழுதும் போராடும் ஹீரோவின் நட்பை படத்தில் பெரிதாக பேசப்படவில்லை. கதைக்காக நட்பு என்று இயக்குனர் கொடுத்திருக்கிறார். பாடல்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளுக்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. முதல் பாதி விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் சென்றாலும் இரண்டாம் பாதியில் இயக்குனர் சுதப்பி இருக்கிறார். அதோடு எமோஷனல் காட்சிகள் எதுவும் பெரிதாக மக்கள் மத்தியில் ஈர்க்கும் அளவிற்கு இல்லை.

சில இடங்களில் காட்சிகள் எங்கே செல்கிறது என்று புரியாமல் இருக்கிறது. சில காட்சிகள் தொடர்பு இல்லாமல் தொங்கிக் கொண்டிருக்கின்றது. மொத்தத்தில் இயக்குனர் திரைக்கதை நன்றாக இருந்தாலும் அதை கொண்டு சென்ற விதத்தில் தான் சுதப்பிவிட்டார். அழுத்தமான காட்சிகளை கொடுத்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்தார்கள்

கதை கரு நன்றாக இருக்கிறது

பின்னணி இசை ஓகே

செம்மர கடத்தலில் ஏழை தமிழர்களின் வலியை காண்பித்திருக்கிறார்

குறை:

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் சொதப்பிவிட்டார்

இரண்டாம் பாதி சரியில்லை

நிறைய தேவையில்லாத காட்சிகள்

நிறைய லாஜிக் குறைபாடுகள்

சுவாரசியத்தையும் சஸ்பென்சையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் ரெட் சாண்டல் வுட்- தமிழர்களின் சரித்திரத்தை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

Advertisement