மாஸ்டர் பட நடிகையை மணந்துள்ளார் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். . ஆனால், இவர் பல வருடங்கள் முன்பே சினிமாவில் கால்பதித்திருக்க வேண்டியவர். அதுவும் நெல்சன் மூலமாகவே நிகழ இருந்தது. நெல்சன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதுதான், ரெடின் கிங்ஸ்லி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின் 2010-ம் ஆண்டு சிலம்பரசன், ஹன்சிகா வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை நெல்சன் தொடங்கினார். இதில் ரெடினும் நடித்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த படம் பாதியிலேயே டிராப் ஆனது. மேலும், நெல்சனை போல் ரெடினுக்கும் திரைத்துறை அறிமுகம் தள்ளிப்போனது. பின் ஏழு வருட போராட்டத்துக்கு பிறகு, ‘கோலமாவு கோகிலா’ மூலம் மீண்டும் நெல்சன், ரெடின் இருவரும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்தார்.
மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படம் வசூலில் கோடிகளை குவித்தது. மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படத்தின் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம்.
டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான இடியட், சிம்பு நடிப்பில் உருவான பத்து தல, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், கோஷ்டி, வீட்டுல விஷேசங்க போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் பட நடிகையை திடீர் திருமணம் முடித்துள்ளார். சங்கீதா வேறு யாரும் இல்லை, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும் ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் சங்கீதா. இந்த படத்தில் இவர் சில நிமிட காட்சியிலேயே நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் இந்த டாக்டர்.இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் வலிமை படத்தை பற்றி கூறும்போது அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் வினோத் உடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக அமைந்ததாகவும் தெரிவித்து இருந்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.