மகள் இருக்கிறாள், காசுக்காக திருமணம் பண்ணேன்னு- விமர்சனங்கள் குறித்து கிங்ஸ்லி மனைவி உருக்கம்

0
281
- Advertisement -

திருமணத்திற்கு முன் தன் வாழ்வில் நடந்த மிகப்பெரிய சோகம் குறித்து நடிகை ரெடின் மனைவி சங்கீதா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் 1998ல் நடன கலைனராக அறிமுகமானார். அதன் பின் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இவர் டாக்டர், அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகியிருந்த மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் செய்து தந்திருந்தது. இதை அடுத்து ரெடின் கிங்ஸ்லி பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இவர் மாஸ்டர் பட நடிகையை கடந்த ஆண்டு திருமணம் செய்து இருந்தார். அவர் வேற யாரும் இல்லை நடிகை சங்கீதா தான்

- Advertisement -

சங்கீதா திரைப்பயணம்:

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான் சங்கீதா. மாஸ்டர் படத்தில் மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் சங்கீதா. இந்த படத்தில் இவர் சில நிமிடம் நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டார். அதன் பின் பிரபல நடிகர்களின் படங்களில் சிறு ரோலில் நடித்து இருந்தார். பின் பெரிதாக சினிமா வாய்ப்பு இல்லாததால் தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார்.

ரெடின்- சங்கீதா திருமணம்:

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவர்கள் திருமணம் மைசூரில் உள்ள ஒரு படப்பிடிப்பில் நடந்தது. மைசூரில் திடீர் திருமணத்தில் படகுழுவினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் பலரும் இது ஷூட்டிங் கல்யாணம் தான் நினைத்தனர். பின் சங்கீதாவிற்கு மேக்கப் போட்ட பெண் ஒரு பேட்டியில், இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்யவில்லை. அவருக்கு மைசூரில் படப்பிடிப்பு நடந்ததால் அந்த இடைவேளையில் தான் திருமணம் நடந்தது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

சங்கீதா பேட்டி:

அதோடு ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர், சங்கீதா இந்து என்பதால் இரு முறைப்படி திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு ரெடின்- சங்கீதா இருவருமே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சங்கீதா, திருமணத்திற்கு முன்பு ஒரு நாள் நானும் என்னுடைய அம்மாவும் வெளியில் கிளம்பினோம். அப்போது என்னுடைய அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்தது. ஆனால், அவர் எங்களிடம் சொல்லவே இல்லை. அவர் வீட்டு வாசலுக்கு வந்து எங்களை வழியனுப்பினார். அந்த நேரம் எங்களுடைய கார் ஏதோ ஒரு பிரச்சனை செய்தது. இதனால் மீண்டும் நாங்கள் வீட்டுக்கு வந்தோம்.

திருமணம் குறித்து சொன்னது:

கொஞ்ச நேரம் கழித்து தான் நாங்கள் வேறொரு காரில் வெளியே போனோம். அப்போது கூட அவர் எங்களிடம் எதுவுமே சொல்லவில்லை. பின் என்னுடைய அப்பா நெஞ்சு வலியில் இறந்துவிட்டார். அவருடைய இழப்பை இன்றுவரை எங்களால் ஈடுகட்ட முடியவில்லை. என்னுடைய திருமணத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய வேதனையை கொடுத்திருந்தது. இந்த சூழலில் தான் நான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால், என்னுடைய திருமணம் குறித்து பலரும் பலவிதமாக கேலி கிண்டல் செய்து தவறாக பேசுகின்றனர். அதிலும் சிலர் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது, எனக்கு மகள் இருக்கிறாள், காசுக்காக நான் திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதற்கு விளக்கம் கொடுத்தேன். இருந்தும் என்னை பற்றி தவறாக தான் பேசுகிறார்கள். இதனால் நான் ரொம்பவே மனம் உடைந்து போய் விட்டேன் என்று பேசியிருந்தார்.

Advertisement