சுஷாந்த் கனவை நீங்கள் நனவாகுங்கள். ரீல் சுஷாந்திற்கு குவியும் கமன்ட்.

0
1816
sushanth
- Advertisement -

ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே புரட்டி போட்ட விஷயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை மரணம் தான். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். நடிகர் சுஷாந்த் அவர்கள் ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பின்னர் குரூப் டான்சராகவும், சிறு சிறு கதாபாத்திரத்திலும் நடித்து சினிமாவில் கால் பதித்தார். பின் ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

-விளம்பரம்-

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சுஷாந்த் கடந்த சில காலங்கள் மன அழுத்தத்தில் இருந்து வந்து உள்ளார். பிறகு மருத்துவ ஆலோசனைகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை தனது அடுக்குமாடி குடியிருப்பில் சுஷாந்த் சிங் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் இறப்பு ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

- Advertisement -

தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது. இவர் தற்கொலை குறித்து பல விதமான சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இவரின் தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போல் அச்சு அசலாக இருக்கும் நபரின் டிக் டாக் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் இருக்கும் நபர் பார்ப்பதற்கு அப்படியே சுஷாந்தின் சாயல் உள்ளார். இவர் நடையிலும், ஸ்டைலிலும் சுஷாந்த் போலவே உள்ளார். இதனால் எங்கள் ஹீரோ இறக்கவில்லை என்றும் மீண்டும் வந்துவிட்டார் என்றும் சுஷாந்தின் கனவை நீங்கள் நினைவாக்குங்கள் என்றும் ரசிகர்கள் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement