விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசன் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை வைத்து இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரிஹானா. இவர் இதற்கு முன்பே சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின் திடீரென்று இவர் சீரியலை விட்டு விலகிவிட்டார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ரிஹானா மீது மோசடி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணப்பன் என்ற தொழிலதிபர் தான் இந்த புகாரை கொடுத்திருந்தார். அதில் அவர், ரிஹானாவிற்கு ஏற்கனவே ஹபிபுல்லா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஆனால், அவரை விவகாரத்தை செய்யாமலே என்னை திருமணம் செய்து கொண்டார்.
ரிஹானா மீது புகார்:
இது எனக்கு லேட்டாக தான் தெரிந்தது. ரிஹானாவிற்கு நான் ஒன்பது லட்சம், அதற்குப் பின்னர் சிறுக சிறுக 9.5 லட்சமும் பணத்தை ஆன்லைன் மூலம் கொடுத்து இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு ரிஹானாவை பூந்தமல்லியில் உள்ள வீட்டில் வசிப்பதற்கு அழைத்து போனேன். அப்போது ரிஹானா, சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்பதால் பலருடன் பழக வேண்டும். இது எல்லாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று சொன்னார். பின் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் இருந்து 18.5 லட்சத்தை ரிஹானா ஏமாற்றி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=wBBob1l2SKE
போலீஸ் விசாரணை:
ரிஹானாவின் தாய் மும்தாஜ், அவருடைய முதல் கணவர் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இதை அடுத்து ராஜ் கண்ணப்பன் அளித்த புகாரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும், ரிஹானா, அவருடைய தாய் மற்றும் முதல் கணவன் ஆகியோரை விசாரித்து வருகிறார்கள். தற்போது இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து ரிஹானாவும் பதிலுக்கு ராஜ் கண்ணன் மீது புகார் அளித்திருக்கிறார். அதில், என்னிடமிருந்து சுமார் 15 லட்சத்திற்கும் மேல் பிசினஸ் செய்வதாக சொல்லி பணம் வாங்கி இருக்கிறார்.
ரிஹானா புகார்:
அவர் சொல்வதெல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார். இப்படி இரு தரப்பிலும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் உண்மையில் நடந்தது என்ன? என்று இருவருக்குமே நெருக்கமானவர்கள் சிலர் அளித்த பேட்டியில்,
ரிகானாவுக்கு முதல் திருமணம் நடந்தது உண்மைதான். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தது பற்றி எல்லாம் ரிஹானாவே பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால், சட்டபூர்வமாக அவர்கள் பிரிந்து விட்டார்களா? என்று தெரியவில்லை. இந்த நிலையில் தான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரிஹானா தோழிகள் சிலர் மூலமாக பார் வைத்திருந்த ராஜ் கண்ணன் அறிமுகம் கிடைத்தது.

பிரச்சனைக்கு காரணம்:
கொஞ்ச நாட்கள் பழகிய உடனே இரண்டு பேருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் யோசித்து இருந்தார்கள். ரெண்டு பேருக்குமே தெரிந்தவர்கள் முன்னிலையில் திருமணம் செய்ததாக ராஜ் கண்ணன் சொல்லி இருந்தார். ஆனால், அந்த திருமணம் சட்டபூர்வமாக நடந்ததா? என்று தெரியவில்லை. பின் இருவரும் கொஞ்ச நாள்தான் சேர்ந்து வாழ்ந்தார்கள். அதற்குப்பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்தது. சின்ன சின்ன பிரச்சனைகள் வளர்ந்து ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்குமே இடையே பெரிய பிளவு வந்தது. தற்போது இருவருமே மாற்றி மாற்றி புகார் தந்திருக்கிறார்கள். இருவரையும் போலீஸ் விசாரணைக்கு வரச் சொல்லி இருக்கிறார்கள். இந்த விவாகரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது போலீஸ் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும் என்று கூறி இருக்கிறார்கள்.






