கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா நடித்து வெளிவந்த படம் ‘கண்ட நாள் முதல்’. இந்த படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனவர் ரெஜினா கேசான்ரா. அதன் பின்னர், அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலம் ஆனார் ரெஜினா.
கடந்த 2014ம் ஆண்டு பில்லா நுவ்வு லேனி ஜீவிதம் படத்தில் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்தார் ரெஜினா. திரையில் இருவருக்கும் காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகியிருந்ததால் இருவரும் நிஜமாகவே காதலிப்பதால் தான் அப்படி நடிக்க முடிந்தது என்று பேச்சு எழுந்தது.
திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். அவர்களின் நடிப்பு தற்போது காதலாக மலர்ந்திருப்பதாக திரையுலகினர் மத்தியில கிசுகிசு நிலவுகிறது. இதுகுறித்து சாய் தரம் தேஜிடம் கேட்டபோது ஒரே வரியில் பதில் அளித்தார்.
அவர் கூறும்போது,’நானும் ரெஜினாவும் உண்மையான நண்பர்களாக இருக்கிறோம்’ என்றார். அதே போல நடிகை ரெஜினாவும் இந்த செய்தியை மறுத்துள்ளார். இருப்பினும் இவர்கள் இருவரையும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு தான் வருகிறது.