கலை என்ற பெயரில் மகனுடன் அரை நிர்வாண கோலத்தில் பாடி பைண்டிங் – சபரி மலை போராளி மீது பாய்ந்த போஸ்கோ சட்டம்.

0
11476
REHANA-FATHIMA

கடந்த ஆண்டு மட்டும் உச்ச நீதி மன்றம் பல சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிவந்தது. ஓரின சேர்க்கை குற்றமில்லை, திருமணத்திற்கு பின் தகாத உறவு குற்றமில்லை போன்ற தீர்ப்புகளை தொடர்ந்து சபரி மலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை என்று உச்சநீதிமன்றம் தீர்பும் வழங்கியது. சபரி மலை விவகாரத்தில் பல்வேறு பெண்கள் கூட போராடி வந்தனர். அதில் மிகவும் முக்கியமான நபர் என்றல் ரிஹானா என்பவரை சொல்லலாம்.

பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் தான் இந்த ரெஹானா பாத்திமா. வேற்று மதத்தைச் சேர்ந்தவரும், சமூக செயற்பாட்டாளரும், மாடலுமான இவரை எப்படி கோவிலுக்குள் விட இயலும் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். ரெஹனா பாத்திமா என்றவுடன் முகநூலில் அவரை வசைப்பாட தொடங்கிவிட்டனர். கேரளாவில் பொது இடத்தில் காதலர்கள் முத்தமிட்டு போராட்டம் நடத்திய கிஸ் ஆஃப் லவ்வில் பங்கேற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதே போல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த போது, ஐயப்ப பக்தர்கள் போலவே கருப்பு நிற உடை அணிந்து, ஒரு போட்டோ சமூக வலைதளத்தில் போஸ்ட் செய்திருந்தார். நடிகையாகவும், மாடலாகவும் இருந்த இவர் ஆபாசமாகவும், நிர்வாணமாகவும் போஸ் கொடுப்பதில் வல்லவர். கேரளாவில் ஆபாச போஸ் கொடுப்பதில் முக்கியமானவர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இவர் அரை நிர்வாண கோலத்தில் தனது சொந்த மகனை வைத்து பாடி பைண்டிங் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விடீயோவிற்காக பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இவர் மீது  Kerala Police Act, Information Technology Act and Protection of Children against Sexual Offences (POSCO) Act என்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement