‘நிர்வாணமா பிணம் மாதிரி படுத்துட்டு இருந்தேன்’ – இரவின் நிழலில் நடித்தது இந்த சீரியல் நடிகை தானா.

0
2826
rekhanair
- Advertisement -

இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து மனம் திறந்து இருக்கிறார் சீரியல் நடிகை ரேகா நாயர். தமிழ் சினிமாவில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட யோசனைகளையும், திரைக்கதைகளையும் தொடர்ந்து திரைப்படமாக வழங்கும் இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபனின் அடுத்த ஆச்சரியம் ஊட்டும் படைப்பு ஜூன் 15 வெளிவந்த திரைப்படம் தான் இரவின் நிழல். இந்த படத்தை பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரித்துள்ளது இரவின் நிழல் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தானு அவர்கள் வெளியிட்டார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார்,பிரகீதா,ரோபோ சங்கர் ,பிரியங்கா, ரேக்கா நாயர் மற்றும் கிருஷ்ணா உள்ளிட்டோர் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.வில்சன் ஔிப்பதிவு செய்துள்ளார். இரவின் நிழல் திரைப்படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற விபெக்ஸ் கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இனிமே சேர வாய்ப்பு இல்லையோ ? பா.ரஞ்சித் & சந்தோஷ் நாராயணன் கூட்டணி முறிவு – காரணம் இது தானா ?

நிர்வாண காட்சிகள் :-

இரவின் நிழல் படத்தில் பிரகிடா மற்றம் ரேக்கா நாயர் இவருரின் நிர்வாண மற்றும் அரை நிர்வாண காட்சிகள் இடம் பெற்று உள்ளன. ஏற்கனவே இந்த படத்தில் நிர்வாண காட்சி குறித்து பேசிய பிரிகிடா, படத்தில் அந்த காட்சி தேவைப்பட்டதால் அதில் நடித்ததாக கூறி இருந்தார். மேலும், அது ஆபாசமாக தெரியாது என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நிர்வாண காட்சியில் நடித்த அனுபவம் குறித்து ரேகா நாயர் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பேசிய ரேகா நாயர் ‘இயக்குனர் பார்திபன் என்னிடம் கதை சொல்லும் போதோ பட படிப்பின் போதோ நிர்வாணம், அரை நிர்வாணம் என்ற வார்த்தையை துளி அளவும் உபயோகிக்கவில்லை. பார்த்திபன் அந்த காட்சிகளை எந்த கண்னோட்டதில் பார்க்கிறார் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று ரேக்கா நாயர் தெரிவித்துள்ளார். படத்தை தணிக்கைக்கு அனுப்பும் போது நிர்வாண காட்சிகளை நீக்க சொன்னால் அதற்காக சன்டையிடுவேன். அந்த காட்சிகளை வெறும் நிர்வாண காட்சியாக பார்க்காமல் கலையாக பார்க்க சொல்லி புரியவைப்பேன் என்று பார்திபன் கூறியதை பிரம்மிப்பாக கூறினார்.

ரேக்கா நாயரின் பங்களிப்பு :-

ரேக்கா நாயர் தன்னுடைய அரை நிர்வாண காட்சி இருபத்தி மூன்று முறை படம் பிடிக்கப்பட்டது.மேலும் அவர் இதை பற்றி கூறுகையில் 23 முறை கரு கலைந்து போனால் எப்படி இருக்குமோ அப்படிதான் ஒவ்வொரு முறையும் பார்த்திபனை சோகமாக பார்த்தோம் என்று அழகாக அந்த தருணத்தை பகிர்ந்துள்ளார். அவர் என்னிடம் கதை கூறுகையில் குழந்தை பால் குடிப்பது போல் காட்சி இருக்கும் ஒரு பக்கம் மார்பகம் தெரியும் படி இருக்கும் அவ்வளவுதான் என்னிடம் கூறினார்.

இரவின் நிழல் சாதனை:-

அதன் பின்பு அவர் என்னிடம் கேட்பதற்கு தயங்கியதை கண்டு சில மாற்றங்களை நானே மாற்றி அமைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார். இரவின் நிழல் திரைப்படம் single shot திரைப்படத்திற்காக ஆசிய சாதனை புத்தகம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது. மேலும், உலகின் முதல் Non leaner single shot திரைப்படம் மற்றும் முதல் ஆசிய single shot திரைப்படம் என்று பெருமிதத்தை அடைந்ததோடு, தொகுப்பாளர் இன்றி படைக்கப்பட்ட முதல் ஆசிய திரைப்படம் என்று பெருமையையும் பெற்று இருக்கிறது.

Advertisement