வெளிய வந்த 3 மாசத்துக்குள்ளேயே 11 பெண்கள் – ஹேம்நாத் குறித்த ஆதாரங்களை லைவ்வாக காட்டிய சித்ராவின் தோழி நடிகை ரேகா நாயர்.

0
1296
Rekha
- Advertisement -

சித்ராவின் மரணம் குறித்து நடிகை ரேகா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவை யாராலும் மறக்க முடியாது. தான் வாழ்ந்த கடைசி நாட்களில் முல்லை என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சித்ரா. இவருடைய மரணம் இன்றும் யாராலும் நம்பவும் முடியவில்லை, ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை பாதித்த ஒன்று. சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
VjChitra

மேலும், இவர் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் அவர் கணவர் ஹேமநாத் தான் என்று சித்ராவின் பெற்றோர்கள் புகார் அளித்து இருந்ததால் ஹேம்நாத்தை போலீஸ் கைது அளித்து விசாரித்து இருந்தது. அதன் பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சில மாதங்களுக்கு முன் தான் சித்ரா உடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் வந்து இருந்தது. இவர் இறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்று இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.

- Advertisement -

சித்ரா மரணம் குறித்து ஹேம்நாத் அளித்த பேட்டி:

இப்படி ஒரு சூழ்நிலையில் சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம். என் உயிர்க்கும் ஆபத்து இருக்குது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று ஹேமநாத் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். இப்படி இவர் கூறியதை அடுத்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூட சித்ராவின் அம்மா, ஹேமநாத் கூறியது அனைத்தும் பொய் என்று பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ரேகா நாயர் அவர்கள் ஹேம்நாத் குறித்து பல விஷயங்களை பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

ரேகா நாயர் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, தன்னை மிரட்டுவதாக ஹேம்நாத் சொன்னது அனைத்துமே பொய். இவர் பல இடங்களில் கடன் வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர் பணம் கேட்க தான் செய்வார்கள். அதற்கு மிரட்டுகிறார் என்றால் என்ன சொல்வது? சித்ராவை இவர் மட்டுமில்லை இவருடன் நாலு பேர் சேர்ந்து செய்திருக்கிறார்கள். இது திட்டமிட்ட கொலை. ஜெயிலில் இருந்து வெளியே வந்த பிறகு நான் செய்யவில்லை. இதையெல்லாம் முன்னாள் அமைச்சர்கள் செய்தது என்று கூறுவதெல்லாம் பொய். இதை ஆரம்பத்திலேயே போலீசிடம் சொல்லி இருக்கலாம்.

-விளம்பரம்-

வீட்டில் காண்டம் வைத்திருந்த ஹேம்நாத்:

ஆளுங்கட்சியின் ஆதரவு வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியின் மேல் பழி போட்டுவிட்டு தப்பிக்க நினைக்கிறார். சித்ராவும், ஹேம் நாத்தும் தங்கியிருந்த வீட்டில் அவ்ளோ காண்டத்தை வைத்திருந்துள்ளார்கள். கணவன் மனைவி ஏன் அவ்வளவு வைத்திருக்க வேண்டும். சித்ரா மாஜி எம் எல் ஏவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சித்ரா தண்ணி அடிப்பா, கெட்ட பழக்கங்கள் இருந்தது. அதனால் தான் இவர்கள் அவசரமாக திருமணம் செய்ய காரணம். பிரேத பரிசோதனை முழுவதுமாக செய்திருந்தால் அனைத்தும் தெரிந்திருக்கும். தன்னை நல்லவன் போல் காட்டிக்கொள்ள தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை ஹேம்நாத் கூறி வருகிறான்.

ஹேம்நாத்தால் ஏமாந்த பெண்கள்:

கமிஷனர் ஆபிஸில் சித்ரா ஹேண்ட் பேக்கில் இருந்த கஞ்சா, ஹேண்ட் பேக் போன்ற அனைத்தும் உன் மனைவியுடையது தானே என்று கேட்டபோது எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என சொன்னான். சித்ரா மட்டும் இல்லாமல் பல பெண்களுடன் ஹேம்நாத் தொடர்பில் இருக்கிறார். அவனது புகைப்படங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. அதோடு ஹேம்நாத்தால் கர்ப்பமாகி அபார்ஷன் செய்த பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி காலில் விழுந்து அழுதும் அவன் மறுத்து இருக்கிறான். அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் பலரது பெண்களின் வாழ்க்கையை சீரழித்து விடுவான் என்று ஆவேசமாக பல விஷயங்களை கூறி இருக்கிறார்.

Advertisement