ஒரு ஆண் இடுப்புல கை வச்சா அனுபவிச்சிக்கோனு நான் சொன்னது அர்த்தம் இதான் – ரேகா நாயர் விளக்கம்.

0
2009
- Advertisement -

தன்னை விமர்சித்து பேசிய கொற்றவைக்கு ரேகா நாயர் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர இடங்களில் நடித்து வருபவர் ரேகா நாயர். இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதோடு சமீப காலமாக இவர் நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அதிலும் இவர் சமூக கருத்திற்கு குரல் கொடுக்கிறேன் என்று ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் இவர் பெண்கள் ஆடைகளை பற்றி பேசி இருக்கிறார். இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் கொற்றவை என்பவர் ரேகா நாயரை விமர்சித்து பேசி இருக்கிறார். இந்நிலையில் அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ரேகா நாயர் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். அதில் அவர், எல்லோருமே நான் பெண்களின் ஆடைகளை பற்றி தவறாக பேசி இருக்கிறேன் என்று அந்த வீடியோவின் ஒரு சிறிய பகுதியை பார்த்துவிட்டு சொல்கிறார்கள்.

- Advertisement -

ரேகா நாயர் அளித்த பேட்டி:

சில நாட்களாகவே youtubeகள் அயோக்கியத்தனத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கின்றது. youtube இல் ஒரு வீடியோ போட வேண்டுமென்றால் முழுமையாக பதிவேற்றுங்கள். ஒரு சில நிமிட வீடியோவை மட்டும் போட்டு தேவையில்லாமல் சர்ச்சையாக்காதீர்கள். ஆரம்ப முதல் இறுதி வரை நான் பேசுவதை முழுமையாக போடுங்கள். அதற்கு தான் ஊடகவியலை பற்றி ஒழுங்காக படிக்க வேண்டும். விஸ்காமை ஒழுங்காக படித்திருந்தால் கூட அவன் அந்த தவறை செய்திருக்க மாட்டான்.

பெண் ஆடை குறித்து சொன்னது:

ஒரு பெண்ணை ஒருவன் ஆசையில் தொடுவதற்கும், படித்து ரசித்து தொடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் அந்த பேட்டியில், ஆண் இருக்கக்கூடிய ஒரு பேருந்தில் ஏறிய பெண் இடுப்பு தெரிவது போல ஒரு ஆடையை அணிந்திருக்கிறாள். அப்படி இருக்கும்போது ஒரு ஆண்மகன் தெரிந்தோ தெரியாமலையோ அவளை தொடும் பட்சத்தில் நீ அதனை அனுபவிக்க வேண்டும். நான் அந்த தொடு உணர்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவன் எந்த நோக்கத்தில் செய்கிறான் என்று உணர்வதற்காக சொன்னேன்.

-விளம்பரம்-

ரேகா நாயர் குறித்த விமர்சனம்:

மேலும், அவன் உங்களிடம் தவறாக நடந்தால் கோழி கழுத்தை திருகுவது போல அவனைத் துருவி போட்டுவிடலாம். ஆனால், நீங்கள் ஆடையை தவறாக அணிந்து கொள்வீர்கள். ஆண்களையும் குற்றம் சொல்வீர்கள் என்று சொன்னால் எனக்கு பூமர் ஆண்டி என்று பெயர் வைத்திருந்தார்கள். மார்பிலிருந்து சேலை விலகினாலே அல்லது இடுப்பு தெரிந்தாலோ அதற்கான பாதுகாப்பான மனநிலையில் இருந்தால் தான் நான் அதில் பயணிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் வேறு எதிலாவது செல்ல வேண்டும்.

ரேகா நாயர் சொல்ல வந்த கருத்து:

பேருந்தில் தான் செல்வேன் என்று சொல்லும் பட்சத்தில் அங்கு உள்ள எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் சக்தி எனக்கு இருக்க வேண்டும். ஒருவன் நம்மை பார்க்கிறான் என்றால் அவன் என்ன மாதிரியான பார்வையில் நம்மை பார்க்கிறான் என்பது நமக்கு தெரிந்துவிடும். அதைத்தான் நான் சொன்னேன். நான் சொன்ன அர்த்தம் அவர்களுக்கு புரியவில்லையா? என்பர் தெரியவில்லை. ஆக மொத்தம் நான் கவனமாக இருந்து கொள் என்று தான் சொல்ல வந்தேன். அதை தவறாக மாற்றி சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள் என்று பேசி இருக்கிறார்.

Advertisement