ஹேமா கமிட்டி தொடர்பாக நடிகை ரேகா நாயர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.

பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை:
இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகரும், அம்மா அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், சினிமா உருவான காலத்தில் இருந்தே பாலியல் தொல்லைகள் இருக்கிறது.
ரேகா நாயர் பேட்டி:
அந்த காலத்தில் மீடியா இல்லாததால் பிரபலங்கள் அட்ஜஸ்ட் பண்ணி இருந்தார்கள். அதே சமயம் அந்த அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக் கொள்ளாமல் நிறைய பேர் சினிமாவை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவிலும் இதுபோன்று நிறைய நடக்கிறது. ஒன்று இரண்டு இல்லை லட்சக்கணக்கில் இருக்கிறது. நான் குரல் கொடுத்தால் எனக்கு இந்த சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது. அதனாலேயே பல நடிகைகள் குரல் கொடுப்பதில்லை. மலையாளத்திலாவது 10, 20 விக்கெட் தான் விழுந்தது. ஆனால், தமிழ் சினிமாவை லிஸ்ட் எடுத்து பார்த்தால் 500 விக்கெட் விழும்.
https://www.youtube.com/watch?v=2e25HI9iY8s
மலையாள சினிமா குறித்து சொன்னது:
இங்கு திறமையாளர்களை யாரும் மதிப்பதில்லை. நடிப்பு, நல்ல டான்ஸ் ஆட தெரிந்தவர்களை காட்டிலும் யார் சொல்வதை கேட்பார்களோ அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இப்போ ஒரு நடிகை குரல் கொடுத்தால் மற்ற ஆண் நடிகர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறது. இதனால் பல நடிகைகளுடைய வீடு உடைக்கப்பட்டு இருக்கிறது. மலையாளத்தில் உச்சத்தில் இருந்த நடிகை இந்த ஊரை விட்டே ஓடும் அளவுக்கு இங்கு பிரச்சனை செய்திருக்கிறார்கள். இது தொடர்பான புகார்கள் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் நிலையில் தமிழ் சினிமா சங்கங்கள் இருக்கிறதா? என்று கேட்டால் கேள்வி குறிதான்.

தமிழ் சினிமா குறித்து சொன்னது:
ஆபீஸிக்கு போனால் ஆளே இருக்க மாட்டார்கள். விஷால் செருப்பால் அடிங்க என்று சொல்லி இருக்காரு. ஆனால், அவர் சொல்றதுக்கு முன்னாடியே நான் அடிச்சிட்டேன். அடுத்தவங்களை நீங்க எப்படி சித்தரித்தீர்கள்? அடி வாங்குனவர்களை நீங்க எங்க போய் வச்சிருக்கீங்க? அவருடைய பதவியை பறித்தீர்களா? மலையாளத்தில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலுமே இது போன்ற பாலியல் தொல்லைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.






