பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ரேகா நாயர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ரேகா நாயர். இவர் தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த ‘ஒத்த செருப்பு’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இவர் சினிமா, சீரியல்களில் நடித்து வருகிறார்.
அதோடு சமீப காலமாக இவர் நடிப்பை தாண்டி சமூக கருத்திற்கு குரல் கொடுக்கிறேன் என்று ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பெண்கள் ஆடைகளை பற்றி பேசி இருந்ததற்கு பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதோடு சில ஆண்டுகளாகவே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்திகள் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ரேகா நாயர், பிக் பாஸ்க்கு என்னை அழைத்தார்கள்.
ரேகா நாயர் பேட்டி:
ஒவ்வொரு முறையும் பல youtube சேனல்கள் என் பெயரை இணைத்து விடுவார்கள். ஆனால், இம்முறை நேரடியாக அழைப்பு வந்தது . நான் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று சொன்னேன். ஏன் நீங்கள் வரலாமே, நீங்கள் வந்தால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்றார்கள். உடனே நான் ஒருவரின் முகத்தைப் பார்த்து முகத்திற்கு முன்னால் நல்லதையோ கெட்டதையோ சொல்லிவிடுவேன். அதுவும் இல்லாமல் அங்கே வந்து இருப்பதெல்லாம் சாத்தியம் இல்லை.
பிக் பாஸ் குறித்து சொன்னது:
நிறைய சண்டைகள் நடக்கும். நிறைய பிரச்சனைகள் வரும். நான் கொஞ்சம் வித்தியாசமான ஆள். அதிக கோபக்காரி. எது வேண்டுமானாலும் நடக்கும். அதனால் என்னை தவிர்த்து விடுங்கள் என்றேன். மீண்டும் இரண்டு நாள் கழித்து நீங்கள் வந்தால் பிக் பாஸ் நன்றாக இருக்கும் என்று எல்லோரும் கருதுகிறார்கள் என்றார்கள். யார் அந்த எல்லோரும் என்று கேட்டேன்? மக்கள் தான் என்றார்கள். மன்னிக்கவும் மக்கள் எப்போதும் என்னை கொண்டாட மாட்டார்கள். நான் எதை செய்ய வேண்டுமோ அதை வெளியேவே செய்து கொள்கிறேன்.
நிகழ்ச்சிக்கு போகாத காரணம்:
அதை மீறி என்னை கூட்டுக்குள் அடைத்து பாட சொன்னால் பாடமாட்டேன், ஆடச் சொன்னால் ஆடமாட்டேன். அடிக்கச் சொன்னால் அடிக்கமாட்டேன். உங்கள் எழுத்துக்களுக்கு என்னால் நடிக்க முடியாது. அதற்குப் பிறகு அவர்களிடம் இருந்து அழைப்பு வரவில்லை. கலந்து கொள்பவருக்கு வாழ்த்துகள் கலக்கிட்டு வாங்க. நான் இதுவரை பிக் பாஸ் பார்த்ததும் இல்லை. அது என்ன மாதிரி நிகழ்ச்சி என்றும் தெரியாது. ஏன் என் வீட்டில் டிவியும் இல்லை. அதனால் பல நிகழ்வுகள் எனக்கு தெரியாமல் கடந்து விடுகிறது. ஆனால், பிக் பாஸ் பிரபலம் என்று பல பேர் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதை மட்டும் பார்க்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் 8:
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஏழு சீசன்கள் முடிவடைந்து தற்போது எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த முறை போட்டியாளர்களிடம் டம்மி டிராபி ஒன்றைக் கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபிக் கிடைக்கும் என விஜய் சேதுபதி அனைவரையும் வாழ்த்தி உள்ளே அனுப்பினார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டிவிஸ்டுகளுடன் பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. முதல் நாளே நிகழ்ச்சி சலசலப்புடன் தொடங்கி இருக்கிறது.