கிழக்கு சீமையிலே ‘ஆத்தங்கரை மரமே’ பாடல் ஞாபகம் இருக்கா. அந்த நடிகை தான் இது.

0
111365
rudra
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பரிச்சயமான நடிகைகளில் ஒருவர் ருத்ரா. இவர் மலையாள மொழியில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு மலையாள மொழிப் படங்களில் நடித்து உள்ளார். மலையாளத்தில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு மலையாள மொழியில் பிரபலமானவர். இவரின் உண்மையான பெயர் ஆர்.வி. அஸ்வினி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு சிறந்த டான்சரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for Actress Rudra

- Advertisement -

இவர் 1991 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். நடிகை ராதிகா அவர்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த கிழக்கு சீமையிலே படத்திலும் இவர் நடித்திருந்தார்.

1993 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது கிழக்கு சீமையிலே படம். இந்த படத்தில் விஜயகுமாரி, ராதிகா, நெப்போலியன், பாண்டியன், விக்னேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் பேச்சி எனும் கதாபாத்திரத்தில் ருத்ரா நடித்திருந்தார். இன்னும் சொல்லப்போனால் ‘மாமனே உன்ன காணாம’ என்ற பாடலின் மூலம் கொடிகட்டி பறந்தவர்.

-விளம்பரம்-

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர் நடிகை ருத்ராவின் புகைப்படத் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அது நடிகை ருத்ரா உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம். அதில் அவர் கூறி இருப்பது,உங்களுடைய நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Manichitrathazhu’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த திரைப்படத்தில் இருந்து நான் உங்களின் தீவிர ரசிகன் ஆகி விட்டேன்.

Actress Rudra

இந்த படத்தில் நீங்கள் சொல்லியிருக்கிற டயலாக் எல்லாம் வேற லெவல் என்று கூறி இருந்தார். இந்த புகைப்படம் விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பிற மொழிகளை விட மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். பின் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

rudra-actress-1

மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய அனைத்து மொழி சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பிரபலமான பகல் நிலவு போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் சீரியல்களில் நடித்தும், நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.

Advertisement