‘இத நான் பயம்புடுத்த சொல்ல’கொரோனா ஆபத்து குறித்து இத்தாலி நண்பர் சொன்னதை பகிர்ந்த அர்ஜுன்

0
16855
arjun
- Advertisement -

கடந்த சில மத்தாக ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வைத்து இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சீனாவை மட்டும் பாதித்து வந்த இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்து உள்ளது இத்தாலி நாடு தான். ஒரே மாதத்தில் 6 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

- Advertisement -

தற்போது சீனாவை விட தற்போது ஸ்பெயினில் தான் அதிக உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் வந்த தகவலின் படி தற்போது வரை இந்த கொரோனா வைரஸால் ஸ்பெயினில் 3343. மேலும், இந்தியாவை பொறுத்த வரை இதுவரை 11 பேர் இந்த வைரசால் பாதிப்படைந்துள்ளனர். ஆனால், இன்னமும் சிலர் இந்த வைரஸின் தாக்கம் பற்றி புரியாமல் இருந்து வருகிறாரகள் இந்த நிலையில் பிரபல நடிகர் அர்ஜுன், இந்த வைரஸின் உண்மை முகம் பற்றி பேசியுள்ளார்.

இத்தாலியில் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும். கோரோனோ வைரஸ் பற்றி அவருடைய நண்பர் கூறிய விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், இந்த விஷயத்தை நான் சொல்லவில்லை என்னுடைய நண்பர் இத்தாலியில் நர்சாக இருக்கிறார் அவர் என்னிடம் பேசி பகிர்ந்து கொண்ட விஷயம் தான் இது இதுவரை இத்தாலியில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இந்த வைரஸின் பாசிட்டிவ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் நாளுக்கு நாள் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும் 500 முதல் 600 பேர் வரை கொத்துக்கொத்தாக இருந்து கொண்டிருக்கின்றனர் இதை பார்க்கும்போது எந்த அளவிற்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அந்த ஊரில் சரியான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லாமல் போய்விட்டது நம் மக்களுக்கு இந்த நிலை வந்தால் அதனை யோசித்து கூட பார்க்க முடியாது.

இதற்காக நாம் பணம் செலவு செய்ய வேண்டாம் தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் அதுவே போதும் அதற்கு இது பேச வேண்டிய நேரம் என்பதால் தான் பேசுகிறேன் தெரிந்தோ தெரியாமலோ வெளியில் போனால் அது ஒருவரை கொலை செய்வதற்கு சமம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வைரஸ் பரவி வருகிறது அதனை கட்டுப்படுத்த வீட்டில் இருப்பதே சிறந்தது என்று கூறியுள்ளார்

Advertisement