கர்ப்பமா இருக்கேன், டயர்டா இருக்கு, ஆனாலும் போகணும் சௌந்தர்யா பேசிய கடைசி கால். அவரை அறிமுகம் செய்த ரஜினி பட இயக்குனர் உருக்கம்.

0
3730
soundarya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சௌந்தர்யா. 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் சென்று இருந்தார்.அப்போது திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யா அவர்கள் அநியாயமாக உயிரிழந்தார். அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று சௌந்தர்யாவின் பிறந்தநாள். அவர் உயிரோடு ரஇருந்து இருந்தால் அவர் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி இருந்திருப்பார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is soundarya-death-anniversary-4.jpg

இந்த நிலையில் சௌந்தர்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய வரும் சௌந்தர்யாவின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவருமான இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்கள் சௌந்தர்யா நினைவு தினத்தை முன்னிட்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியது, சௌந்தர்யா மாதிரி ஒரு திறமையான நடிகையை பார்ப்பது அபூர்வம்.எப்போதுமே சௌந்தர்யா அவர்கள் எந்த படமாக இருந்தாலும் என்னிடம் வந்து கேட்டு பண்ணலாமா வேணாமா என்று கேட்பார்.

இதையும் பாருங்க : இருந்தாலும் இந்த சீன வச்சிருந்திருக்கலாம் – லிப் லாக் காட்சியின் புகைப்படத்தை வெளியிட்ட வாழ் பட பிரபலம்.

- Advertisement -

ஒரு முறை தெலுங்கில் வருடத்திற்கு 10 படங்கள் கொடுத்து இருந்தார் சௌந்தர்யா. அப்போது ரஜினி சாரோட அருணாச்சலம் படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டும் சௌந்தர்யாவால் கொடுக்க முடியாமல் போனது. பின் ரஜினி சார் என்னிடம் கேட்டுக் கொண்டதால் நான் சௌந்தர்யாவிடம் போன் பண்ணி நீ கண்டிப்பாக ரஜினி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னேன்.

Ponnumani - Google Search

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி என்னுடைய மனைவி சுஜாதாவுக்கு சௌந்தர்யாவிடம் இருந்து போன் வந்தது. சௌந்தர்யா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். நான் பிரசாரத்துக்கு போறேன். போய்ட்டு வந்து உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லி விட்டு போனார்கள்.அடுத்த நாள் ஏப்ரல் 16-ஆம் தேதி சௌந்தர்யா எனக்கு போன் பண்ணி சார் உங்களை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். சினிமாவுல நீங்க எனக்கு கொடுத்த வாய்ப்பு மூலம் இந்த அளவிற்கு உள்ளேன் என்று ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-
Sense of a scene: Vijayakanth's Chinna Gounder was not meant to romanticise  caste- Cinema express

நான் கூட ஏன்ம்மா, உனக்கு என்னம்மா ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற? என்று நான் கேட்டேன். சௌந்தர்யா ஒன்னும் இல்லை சார் என்று சொல்லி விட்டு போன் வைத்து விட்டார்.ஆனால், அடுத்த நாளே சௌந்தர்யா இறந்து விட்டார் என்ற செய்தி வருகிறது. சத்யராஜ் சார் என்னை வாசலில் பார்த்தவுடனே பதறிப் போய் ஓடி வந்து என் கையை பிடித்துகொண்டு அழுந்தார். ஏன் சார் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டதற்கு சௌந்தர்யா இறந்துட்டாங்க என்று சொன்னார். சொன்னவுடனே எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் நின்றேன். இந்த சிறு வயதிலேயே சினிமாவில் கொடிகட்டி பறந்த சௌந்தர்யாவுக்கா இந்த நிலைமை 1993-ம் வருஷம் ஏப்ரல் 16-ம் தேதி `பொன்னுமணி’ ரிலீஸாகி செளந்தர்யா புகழ் கொடிகட்டிப் பறந்தது. 2004-ம் வருஷம் ஏப்ரல் மாசம் 17-ம்தேதி அன்னிக்கு செளந்தர்யா உடம்பில் இருந்து உயிர் பிரிஞ்சிடுச்சு என்று கண்கலங்கியபடி கூறினார்.

Advertisement