மாம்பழ முகத்தில் கருவண்டு கண்கள் சுழல, `நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே’ என்ற ‘மதுரை வீரன்’ படத்தின் பாடல் வரிகளுக்கு பத்மினி கண்களாலேயே அபிநயம் பிடிக்கும் அழகுக்கு இணையாக இன்னொரு நாயகி பிறக்கவேயில்லை. நாட்டியப் பேரொளியாக வாழ்ந்து மறைந்த அந்தப் பேரழகுக்கு இன்று 86 வது பிறந்தநாள். `பப்பிம்மா’ எனச் செல்லமாக அழைக்கப்பட்டவரின் நடிப்பும் நடனத்திறமையும் கேக்கின் மேல் செர்ரிபோல அவ்வளவு ரசனையும் ருசியும் சேர்ந்தது. அவர் பற்றிப் பெரிதும் தெரியாத சம்பவங்கள் பற்றி, இங்கே பகிர்ந்துகொள்கிறார் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஏ.எல்.ஜெயந்தி.

Advertisement

அம்மாவுக்கு அசைவம் ரொம்பவும் பிடிக்கும். அதிலும், என் வீட்டுச் செட்டிநாடு கோலா உருண்டை குழம்பை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்.அந்த ஜாலியான விஷயம். இதை பப்பிம்மா என்னிடம் சொன்னபோது சிரித்துச் சிரித்து வயிறு வலித்தது. பப்பிம்மாவுக்குத் திருமணமாகி அமெரிக்கா சென்றிருந்த புதிது.

நாட்டியப் பேரொளியாக கோலோச்சியவருக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாதாம். கணவர் ராமச்சந்திரன், முருங்கைக்காய் சாம்பார் கேட்டிருக்கிறார். பப்பிம்மாவும் சமையல் புத்தகத்தைப் பார்த்து அருமையாகச் சாம்பார் வைத்து, கணவரிடம் பாராட்டும் வாங்கியிருக்கிறார். அதன்பிறகு நடந்ததுதான் காமெடி.

Advertisement

Advertisement

ஒருநாள் அவரின் அம்மாவிடம் போனில் பேசும்போது, ‘சாம்பார் வைக்கிறதெல்லாம் கஷ்டமா இல்லைம்மா. ஆனால், அதுக்கு முருங்கைக்காய் வெட்டறதுக்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரே அளவா என்னால் வெட்டவே முடியலைம்மா. அதனால், முருங்கைக்காயை ஸ்கேலால் அளந்து பால் பாயிண்ட் பேனாவால் மார்க் பண்ணி வெட்டினேன்’ என்றாராம். இதைச் சொல்லும்போது, பப்பிம்மா முகத்தில் அப்பாவி களை வரும் பாருங்கள். அந்தக் குழந்தைத்தனத்தைப் பார்த்து பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்” எனச் சிரிக்கிறார் ஜெயந்தி.

Advertisement