ரசிகர் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ரேஷ்மா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ரேஷ்மா- மதன். இவர்கள் இருவரும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடரின் மூலம் தான் ரேஷ்மா மக்கள் மத்தியில் பிரபலமானார் .
ஆனால், மதன் முன்னாடியே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இருந்தாலும், பூவே பூச்சூடவா சீரியலில் மூலம் தான் மதன் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் ரேஷ்மா மற்றும் மதன் இருவருமே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடம் பிடித்து இருந்தார்கள். இந்த சீரியல் முடியும் நேரத்தில் இருவரும் காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஷாக்கிங் ஏற்படுத்தி இருந்தது.
ரேஷ்மா மற்றும் மதன்:
மேலும், பூவே பூச்சூடவா சீரியல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் அபி என்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்திய கதை. இதற்கு அசோக் உறுதுணையாக இருக்கிறார். அபி ரோலில் ரேஷ்மாவும், அசோக் ரோலில் மதன் நடித்து இருந்தார்கள். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
ரேஷ்மா மற்றும் மதன் திருமணம்:
இதனிடையே ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் சேர்ந்து அபி டெய்லர் சீரியலில் நடித்து கொண்டு இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த தொடர் வெற்றிகரமாக முடிவடைந்தது.
மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி:
தற்போது இவர்கள் ரேஷ்மா மற்றும் மதன் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இருவருமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார்கள். அந்த வகையில் இன்று ரேஷ்மா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.
கோபத்தில் ரேஷ்மா போட்ட பதிவு:
அப்போது அவர், நான் தற்போது எந்த ப்ராஜெக்டிலும் இல்லை. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நெட்டிசன் ஒருவர், நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பிருக்கிறார். இதை பார்த்து கோபமான ரேஷ்மா, யப்பா, இல்லப்பா. எத்தனை பேர் தான் கிளம்பி இருக்கீங்க. என்று பதில் கூறி அந்த நபர் pregnant என்ற வார்த்தையை ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பதை குறிப்பிட்டு ரேஷ்மா கலாய்த்து இருக்கிறார்.