நான் Biggboss பாக்கல ஆனா அசீம் நல்லவன் – பிரசாந்த் போட்ட பதிவால் வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
409
vikraman
- Advertisement -

பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் பிக் பாஸ் பிரபலம் அசிமை பற்றி சொல்லிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா,adk ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, அமுதவனான்,என்று 5 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார கடைசியில் Adk வெளியேறி இருந்தார். அதே போல இறுதி வாரம் என்பதால் இந்த வாரம் அனைத்து போட்டியாளரும் நாமினேட் ஆகி இருந்தார்கள். மேலும், சமீபத்திய நிகழ்ச்சியில் பணப் பை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

- Advertisement -

2வது முறை பணப்பெட்டி :

இதில் 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கதிரவன் வெளியேறினார். இந்த நிலையில் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக 2வது பணப்பெட்டி டாஸ்க் வந்துள்ளது. இதனால் போட்டி மேலும் சுவாரசியமாக நடந்து வருகிறது. இப்படி பட்ட நிலையில் தொடக்கம் முதலே சுவாரஸ்யத்திற்கும் சரி விமர்சனங்களுக்கும் சரி பஞ்சமே இல்லாத நபர் என்றால் அது அசீம் தான். எப்போது பார்த்தாலும் யாராவது ஒருவருடன் விவாதம் செய்வதும். பின்னர் கடைசி வாரத்தில் பிக் பாஸ் தொகுப்பாளராக கமலஹாசனிடம் தீயிட்டு வாங்குவதுமாக இருந்து வருகிறார்.

அசீம் PRடீம் :

ஆனால் இவர் செய்யும் சர்ச்சைகளினால்தான் இந்த பிக் பாஸ் சீசனில் பல திருப்பங்கள் ஏற்பட்டது என்று கூறலாம். கிட்டத்தட்ட இவர் இல்லை என்றால் இந்த பிக் பாஸ் சீசன் இல்லை என்ற அளவிற்கு ஆகிவிட்டது. மேலும் இவரை ஒரு கதாநாயகனாக காட்ட பிக் பாஸ் வீட்டிற்கு வெளியில் PR டீம் ஓன்று இருப்பதாகவும், அந்த PR டீம் அரசியல் கட்சிகளுக்கு உதவுவது போல பிக் பாஸ் வீட்டில் விளையாடி கொண்டிருக்கும் அசீமையும் பிரபல படுத்தி வருகிறது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சினிமா விமர்சகர் பிரசாந்த் :

இப்படி பட்ட நிலையில் தான் ப்ளு சட்டை மாறனை போன்ற ஒரு பிரபல சினிமா விமர்சகரான பிரசாந்த் சமீபத்தில் போட்டிருந்த ட்விட்டில் நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை ஆனால் அசீம் நன்றாக விளையாடுகிறார் என்று மக்கள் சொல்லி கேள்விப்பட்டேன். அதனால் மக்கள் செல்வன் அசீம் தான் என்று பதிவிட்டிருந்தார். மேலும் தொடர்ந்து அசீம் தான் இந்த சீசனில் வெற்றியாளர் என்று பதிவிட்டு வரும் நிலையில் #abuserazeem என்ற ஹாஸ்டக்கை காலை முதலே மக்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

இந்தநிலையில் பிரசாந்த் அசிமை ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளிவரும் நிலையில் அறம் வெல்லும் என்று விக்ரமன் புகைப்படத்தை கோலமாக போட்டிருந்தனர். அந்த புகைப்படத்தை பகிர்ந்த பிரசாந்த் இதற்கு என்னுடைய முகத்தை வரைந்திருக்கலாம் என்று கூறினார். இப்படி பட்ட நிலையில் தான் பிரசாந்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் பார்க்காமேலே ஒருவரை நல்லவர் என்றும் சொல்லும் நீ இப்படித்தான் படம் பார்க்காமல் விமர்சனம் கூறுகிறாயா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement