பிரேக்கிங் : சுஷாந்த் வழக்கில் முன்னாள் காதலியை கைது செய்த போதை பொருள் தடுப்பு அதிகாரிகள்.

0
753
sushant
- Advertisement -

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருந்த இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோரின் மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
If Rhea Chakraborty evades ED's questions today, she can also be arrested':  Sushant Singh Rajput's family's lawyer - bollywood - Hindustan Times

அதிலும் இவர் நடித்த தோனி படத்தின் மூலம் உலகம் முழுதும் பிரபலமடைந்தார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா மீது புகார் அளித்ததை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் கடந்த மாதம் இந்த வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் பிறர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை, போதை பொருள் ஒழிப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று(செப்டம்பர் 7) போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரியாவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது; போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் மும்பையில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார்.  இதன்பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் சுஷாந்த் சிங்கின் வழக்கில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்துள்ளது.   

-விளம்பரம்-
Advertisement