போதை பொருள் விவகாரம் , விசாரணையில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரை போட்டு கொடுத்த சுஷாந்த் காதலி.

0
610
rhea
- Advertisement -

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவான்களாக திகழ்ந்து கொண்டிருந்த இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோரின் மரணம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.2010 ஆம் ஆண்டு வெளியான Kai Po Che என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதிலும் இவர் நடித்த தோனி படத்தின் மூலம் உலகம் முழுதும் பிரபலமடைந்தார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரது தந்தை கே.கே.சிங் பீகார் போலீசில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா மீது புகார் அளித்ததை தொடர்ந்து, தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Advertisement -

போதைப்பொருள் கும்பலுடன் நடிகை ரியாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் கடந்த மாதம் இந்த வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் பிறர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை, போதை பொருள் ஒழிப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் நடிகை ரியா பல முக்கிய புள்ளிகளின் பெயரை கூறியுள்ளார்.

அதில் தமிழில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத் சிங் பெயரையும் ரியா கூறியுள்ளார். மேலும், பிரபல பாலிவுட் நடிகரான சைப் அலிகானின் மகள் சாரா அலிகானும் போதை பொருள் பயன்படுத்திய விவாகரத்தில் தொடர்புடையதாக ரியா கூறியுள்ளார்.மேலும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை கூறி உள்ளார். இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement