‘லாக்டவுன் டைமில் வீட்டில் இருந்து போர் அடித்து விட்டது’ – கணவருடன் நதிக்கரையில் மதுவுடன் பிக்னிக் கொண்டாடிய நடிகை.

0
7576
richa
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘லீடர்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ராணா டகுபதி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகைகள் ப்ரியா ஆனந்த், ரிச்சா கங்கோபாத்யாய் என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர். இது தான் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து வெங்கடேஷின் ‘நாகவள்ளி’ மற்றும் ரவி தேஜாவின் ‘மிராபகே’ என இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தார் ரிச்சா கங்கோபாத்யாய். அதன் பிறகு தெலுங்கு திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய், அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார்.

இதையும் பாருங்க : தனது 17 வயதில் எடுத்த முதல் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்ட சொப்பன சுந்தரி புகழ் மனிஷா யாதவ்.

- Advertisement -

2011-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘மயக்கம் என்ன’. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரியானார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தினை பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்திருந்தார். படத்தில் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

https://www.instagram.com/p/B_ML53sjQ7X/

‘மயக்கம் என்ன’ படத்துக்கு பிறகு சிம்புவின் ‘ஒஸ்தி’ என்ற தமிழ் படத்தில் நடித்தார் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். அதன் பிறகு பெங்காலி மொழியில் ‘பிக்ரம் சிங்கா : தி லயன் இஸ் பேக்’ என்ற படத்திலும், தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்தார். பின், நடிப்பிற்கு குட்பை சொன்ன ரிச்சா கங்கோபாத்யாய், ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : கணவரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்வாதி. விவாகரத்து காரணமா ? அவரே வெளியிட்ட வீடியோ.

-விளம்பரம்-

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அதில் “இந்த லாக் டவுன் டைமில் வீட்டில் இருந்து போர் அடித்து விட்டது. ஆகையால், இன்று எனது கணவர் என்னை ஒரேகான் கடற்கரைக்கு பிக்னிக் கூட்டிச் சென்றார்” என்று பதிவிட்டு அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அதில் சருக்கம் இடம்பெற்று உள்ளது.

Advertisement