தொடர்ந்து நெருக்கமான புகைப்படங்கள் ? இணையத்தில் புகைந்த காதல் கிசுகிசு, மௌனம் சாதித்த யாஷிகா, ரிச்சர்ட் கொடுத்த விளக்கம்.

0
1889
Richard
- Advertisement -

யாஷிகாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் குறித்து ரிச்சர்ட் விளக்கமளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட். இவர் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனர் ஆவார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. பின் இவர் பல படங்களில் நடித்தாலும் சினிமாவில் இவருக்கு என ஒரு நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

-விளம்பரம்-

கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்து இருந்தார் ரிச்சர்ட். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் தான் ‘திரௌபதி’ படத்தை இயக்கினார். இந்த படத்தில் ஹீரோவாக ரிச்சர்ட் நடித்து இருந்தார்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ரிச்சர்ட். இதுதொடர்பான அறிவிப்பை ஏற்கனவே மோகன் ஜி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிச்சர்ட் யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து யாஷிகா தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம், அவருடன் காரில் இருக்கும் புகைப்படம் என்று அடுத்தடுத்து புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் ரிச்சர்ட். இதனால் இவர்கள் இருவரும் காதலிக்கின்றனரா என்று ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர். அதே போல எப்போதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா கூட இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்காமல் மௌனம் காத்துவந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ரிச்சர்ட் ‘ நானும் யாஷிகாவும் ‘சில நொடிகளில்’ என்ற படத்தில் நடித்து வருகிறோம். இப்படத்தினை, கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார். ‘ஜீன்ஸ்’, ‘தாம் தூம்’, ‘கோச்சடையான்’ படங்களை தயாரித்த முரளி மனோகர் தயாரிக்கிறார். படத்தின் கதைப்படி நானும் யாஷிகாவும் ஹாலிடே செல்வோம். அப்படி, செல்லும் இடத்தில் போனிலிருந்து செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகளைப் படமாக்கினார்கள்.

அந்தப் படங்களைத்தான் பட புரொமோஷனுக்காக எனது ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாவிலும் பகிர்ந்துகொண்டேன்.அப்படம் தொடர்பான புகைப்படங்களைதான் நான் சோசியல் மீடியாவில் பகிர்ந்தேன். மற்றபடி, எனக்கும் யாஷிகாவுக்கும் எல்லோரும் நினைப்பது போன்று காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது. எங்கள் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி எடுத்துக்கொள்கிறார்கள். வெளியூரில் இருந்ததால் உடனடியாக இதுகுறித்து எதுவும் பேசமுடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Advertisement