ரஜினிகாந்த் – ஷங்கர் இடையே ஏற்படப்போகும் மிகப்பெரிய மோதல் ? பின்னணி இதோ.

0
521
- Advertisement -

ரஜினிகாந்த் – சங்கர் படங்கள் மோத போகும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரை உலகில் மிக முக்கியமான பிரபலங்களாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் சங்கர். இவர்களுடைய கூட்டணியில் வெளிவந்திருந்த சிவாஜி, எந்திரன் 2.0 போன்ற படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில்இடம் பெற்று சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது;. அதற்கு பின் இவர்கள் கூட்டணியில் படம் வெளியாக வில்லை.

-விளம்பரம்-

தற்போது ரஜினி அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

- Advertisement -

ரஜினி படம்:

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிவடைந்து விட்டது. மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதை ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள். அதேபோல் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 என்ற படம் உருவாகி வருகிறது. பல பிரச்சினைகளுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Jailer

சங்கர் இயக்கும் படம்:

அது மட்டும் இல்லாமல் ஷங்கர் அவர்கள் நடிகர் ராம்சரனை வைத்து ஆர்சி 15 என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதுகிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும், படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

ரஜினி படம் ரிலீஸ்:

இப்படி ரஜினி மற்றும் ஷங்கர் ஆகியோரின் படங்களின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சங்கரின் படமும், ரஜினிகாந்தின் படமும் மோத இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது,நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டாரின் ஜெய்லர் படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படுக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

ரஜினி-சங்கர் படங்கள் மோதல்:

அதேபோல் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ஆர் சி 15 படத்தையும் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இரண்டு மிக பெரிய நட்சத்திரங்களின் படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் மிகப்பெரிய போட்டி நடக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement