விஜய் டீவிக்கு சென்றாலும் சன் டிவியை மறக்காத ரியோ.! குவியும் பாராட்டு.!

0
925
Rio-Raj
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல்வேறு நடிகர் நடிகைகள் சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவியில் இருந்து பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சினிமாவின் நியூ என்ட்ரியாக வருகை தந்திருப்பவர் பிரபல தொகுப்பாளர் ரியோ ராஜ்.

-விளம்பரம்-

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரியோ ராஜ். இவர் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமாக உள்ளார்.

- Advertisement -

தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ரியோ, குறிப்பாக இளம் வயதினர் மத்தியில் அதிகம் கவனிக்க படுபவராக வளம் வருகிறார். விரைவில் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாக உள்ள இவர், தற்போது விஜய் டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் தொலைக்காட்சி தனது பிறந்த நாளை கொண்டாடியது. இதனால் சன் தொலைக்காட்சிக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்திருந்தார் ரியோ. விஜய் டிவிக்கு வந்தாலும் பழசை மறக்காமல் சன் தொலைக்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்த ரியோவிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement