‘ராஷ்மிகா மந்தனாவுடன் பணிபுரிய விருப்பமில்லை’ காந்தாரா பட ஹீரோவின் ஓபன் ஸ்பீச் – பின்னணி இது தான்

0
413
rashmika
- Advertisement -

ராஷ்மிகா மந்தனாவுடன் பணியாற்ற விருப்பமில்லை என்று ரிஷப் செட்டி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவை பிரமிக்க வைத்த படங்களில் ஒன்று காந்தாரா. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் காந்தாரா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஜனீஷ் எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷப் ஷெட்டி தான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் தான் கன்னட மொழியில் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தமிழில் இந்த படம் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தான் தயாரிப்பாளர் படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

காந்தாரா திரைப்படம்:

தமிழகத்திலும் காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. இந்த படம் பிறமொழி ரசிகர்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்தை பார்த்து திரைப்பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சனங்கள் என பலருமே பாராட்டி இருக்கின்றனர். இந்த படம் இதுவரை 400 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ரிஷப் ஷெட்டி அளித்த பேட்டி:

இதனை அடுத்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி காந்தாராப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்
வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் சமந்தா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு யாருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ரிஷப் ஷெட்டி கூறியிருந்தது, என்னுடைய படத்தின் கதையை எழுதி முடித்ததுமே அதற்கான நடிகர்களை நானே முடிவு செய்கிறேன்.

-விளம்பரம்-

ரிஷப் ஷெட்டி கொடுத்த பதிலடி:

புது முகங்கள் எந்த தடையும் இல்லாமல் வருவதால் அவர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். அதனால் நீங்கள் சொன்ன இந்த பிரபலங்களுடன் நான் பணியாற்ற விரும்பவில்லை. ஆனால், சாய்பல்லவி மற்றும் சமந்தாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டி இருந்தார். இதன் மூலம் ரிஷப் ஷெட்டி, ராஷ்மிகாவிற்கு பதிலடி கொடுத்திருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். அதுஎன்னவென்றால், இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தனது முதல் படமான கிரீக் பார்ட்டி பற்றி பேசி இருந்தார்.

ராஷ்மிகா அளித்த பேட்டி:

ஆனால், அந்த படத்தை தயாரித்த ரக்ஷித் செட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார். இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். இருவரும் நண்பர்கள் என்பதால் இப்படத்தை ரக்‌ஷித் தயாரித்திருந்தார். பின் ரக்‌ஷித்-ராஷ்மிகா இருவருக்கும் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்று விட்டது. இதனால் அவர்களுக்குள் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை என்று கூறப்பட்டது. இதனால் தான் ராஷ்மிகா மந்தனா ரக்‌ஷித் பெயரை கூறாமல் இருந்தார். தற்போது ரிஷப் ஷெட்டி அளித்த பேட்டியின் மூலம் ராஷ்மிகாவுக்கு பதில் கொடுத்து விட்டார்.

Advertisement