தப்பா நினைக்காதீங்க, இவங்களுக்காகவாது மதுக்கடையை திறங்க பாஸ். பிரபல நடிகர் சர்ச்சை கருத்து.

0
13367
wineshop
- Advertisement -

கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி 31 ஆயிரத்துக்கும் மேல் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறது. சுகாதாரம் அமைப்புகள் சர்வதேச அளவில் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

கொரோனா வைரஸை எதிர்த்து அரசாங்கம், காவல்துறை, மருத்துவர்கள் என அனைத்து துறையும் உயிர் கொடுத்து போராடி வருகிறார்கள். இந்தியாவிலும் இந்நோய் தொற்று தீவிரம் அடையாமல் இருக்க பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

- Advertisement -

மோடி அவர்கள் பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் கடைகள், போக்குவரத்துக்கள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகர் ரிஷி கபூர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்து உள்ளார், அதில் அவர் கூறியிருப்பது, நாடு முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் எடுத்தது சரியான முடிவு தான். ஆனாலும், அங்கீகாரம் பெற்ற மதுக்கடைகளை தினமும் சில மணி நேரமாவது திறந்து வைக்க வேண்டும்.

-விளம்பரம்-

இதனால் என்னை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். முழு நேரமும் வீட்டில் இருப்பதால் மன அழுத்தத்தில் இருப்பார்கள். மேலும், அவர்களுக்கு கொரோனா செய்திகள் அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதிலிருந்து விடுபட தான் இந்த கோரிக்கை வைக்கிறேன். போலீஸ், மருத்துவர்கள் போன்றவர்களுக்காகவும் தான். மனநிலையை மாற்ற மது உதவும்.

மது கடைகள் திறக்கப்பட விட்டாலும் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு சாரயம் விற்கப்படுகிறது. எனவே அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இப்படி இவர் பதிவிட்ட கருத்துக்கு சிலர் ஆதரவையும், சிலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement