மிக்சடு மார்ஷியல் பாக்ஸராக பயிற்சி பெற்று, நடிகையாகப் பிரபலமானவர் ரித்திகா சிங். இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். முதல் படத்திலேயே தேசிய விருதையும் அள்ளிச் சென்றவர் இந்த இளம் நடிகை.
தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்திற்கு பிறகு தமிழ், தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர், தற்போது தனது உடலை மெருகேற்றிக்கொண்டு வருகிறார்.
23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரேபோட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார்.
அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா. இருப்பினும் தனது பாக்சிங் தொழிலை மறக்காமல் இருந்து வருகிறார் ரித்விகா.சமீபத்தில் தனது தந்தை மற்றும் தம்பியின் புகைப்படத்தை பதிவிட்ட ரித்விகா, அவரது தந்தை தான் தனக்கு பாக்சிங் கற்றுக்கொடுத்த ஆசான் என்று கூறியுள்ளார்.