சினிமா துறையை பொருத்தவரை ஒரு சில நடிகைகள் நடிக்க வருவதற்கு முன்பாக மாடல் அழகிகளாகவோ விளம்பரத்தில் நடித்த நடிகைகளாக தான் இருப்பார்கள். ஆனால், குத்துச்சண்டை மேடையில் அதிரடி பெண்ணாக இருந்து தற்போது சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரித்திகா சிங். தமிழில் 2016 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான “இறுதி சுற்று” படத்தில் கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். இறுதி சுற்று படத்திற்கு பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
23 வயதாகும் நடிகை ரித்திகா சிங் ஏற்கனவே மிக்சுடு மார்ஷல் அர்ட்ஸ் எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா.
தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது புகைப்படம் ஒன்றை பதிவட்ட போது ரசிகர்கள் சிலர் முகத்தில் இருக்கும் முகப்பருவை குறிப்பிட்டு கமன்ட் செய்தனர்.
பொதுவாக ரசிகர்களின் இந்த கமென்டிற்கு ரித்திகா செவி சாய்ப்பது இல்லை. ஆனால், தனது முகப்பரு குறித்து கமன்ட் செய்த ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், சமீபத்தில் நான் பதிவிட்ட புகைப்படத்தில் என் முகத்தில் முகப்பரு இருப்பதை பார்த்து பலர் கமெண்ட் செய்திருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன் தயவுசெய்து இப்படி கமெண்ட் செய்வதை நிறுத்துங்கள். எனக்கு பிம்பிள் இருப்பது தெரியாதா ? அது தெரிந்துதானே நான் புகைப்படத்தை பதிவிடுகிறேன் என்று வெளுத்து வாங்கியுள்ளார்.