திரைப்படங்களில் நடிக்க போவது இல்லை.! ரித்விகா திருமணம் குறித்து அதிரடி அறிவிப்பு.!

0
1143
Rithvika
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த சீசனில் இடத்தில் வந்த ரித்விகாவிற்கு 50 லட்ச ரூபாய் வந்த கோப்பையும் வழங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரித்விகா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகை ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வென்ற பணத்தில் இருந்து ஒரு பகுதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுத்து உதவி செய்துள்ளார் என்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்றும் சில செய்திகள் பரவி வருகிறது.

- Advertisement -

ஆனால், விஜய் சேதுபதியுடன் தான் நடிக்கவில்லை என்று பேட்டி ஒன்றில் விளக்கமளித்தார் நடிகை ரித்விகா. இந்நிலையில், ரித்விகா திருமணத்திற்கு தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பாக விழா ஒன்றில் பேசிய ரித்விகா, இந்த ஆண்டு எனக்கு கண்டிப்பாக திருமணம் இல்லை. சில படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால் அதை முடித்துக்கொடுத்துவிட்டு அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வேன். இனி புதிய படங்களை ஏற்கமாட்டேன். திருமணத்திற்கு பிறகு கணவர் அனுமதித்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement