அவங்க யாருன்னே எனக்கு தெரியாது- தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு ரியாஸ் கான் விளக்கம்

0
347
- Advertisement -

தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாருக்கு நடிகர் ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்திருக்கும் ஆடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ் கான். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

தற்போது ரியாஸ் கான் படங்களில் மட்டும் இல்லாமல் சீரியலிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலான ‘இனியா’ தொடரில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ்கான் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். சமீபத்தில் தான் இவர்களது மகன் ஷாரிக் ஹாசனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

- Advertisement -

ஹேமா கமிஷன் அறிக்கை:

இப்படி சந்தோசமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், மலையாள நடிகை ரேவதி சம்பத் சமீபத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது மலையாள சினிமாவில், ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி புயலை கிளப்பி இருக்கும் நிலையில், நடிகை ரேவதி சம்பத் நடிகர் சங்க பொதுச்செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதனால், மலையாளத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் சமீபத்தில் விளக்கினார்.

ரியாஸ் கான் மீது புகார்:

அதனைத் தொடர்ந்து நடிகர் ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதில், ஒரு புகைப்படக் கலைஞர் தன் அனுமதி இல்லாமல் ரியாஸ் கான் இடம், தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டார். அதற்குப் பிறகு, ஒரு நாள் இரவு ரியாஸ் கான் இடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும். அப்போது ரியாஸ் கான் அவரைப் பாலியல் உறவில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு விருப்பம் இல்லை என்றால் தனது தோழிகளை அனுப்பி வைக்குமாறு ரியாஸ் கான் கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

ரியாஸ் கான் மறுப்பு:

தற்போது இந்த குற்றச்சாட்டை மறுத்து ரியாஸ் கான் செய்தியாளர்களிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அதில் அந்தப் பெண் யார் என்றே எனக்குத் தெரியாது. அது எப்போது நடந்தது, எங்கு நடந்தது என்ற எந்த விவரமும் தெரியாமல் நானாக இதற்கு விளக்கம் அளிக்க முடியாது. நான் சினிமாவில் 36 வருடங்களாக 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இதுவரை யாரும் இது போன்ற ஒரு புகாரை என் மீது கொடுத்ததில்லை.

சட்ட ரீதியாக சந்திப்பேன்:

மேலும், அந்தப் பெண் நான் போனில் பேசியதாக கூறுகிறார். அது நான் தான் என்று அந்த பெண்ணிற்கு எப்படி தெரியும். நான் வீடியோ கால் மூலம் பேசியிருந்தால், அவர் என்னை குறை கூறலாம். எனது குடும்பத்தினர் மட்டுமில்லாமல், சினிமாவைச் சேர்ந்த அனைவருக்கும் என்னைப் பற்றி நன்றாக தெரியும். இதுபோல் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. சட்ட ரீதியாக விசாரணைக்கு என்னை அழைத்தால், நிச்சயமாக நான் விளக்கம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்

Advertisement