தன் மனைவியுடன் தான் வாங்கிய புதிய சொகுசு காருடன் போஸ் கொடுத்த RJ பாலாஜி , விலை எவ்ளோ தெரியுமா ? –

0
872
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி. இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். ஆர் ஜே பாலாஜி குடும்பத்தை அவரது தந்தையார் கைவிட்டு இருந்தும் அவருடைய தாய் தான் எல்லாமுமாக இருந்து ஆர்ஜே பாலாஜியை ஆளாக்கினார். தன்னுடைய சிறு வயதில் மிக கஷ்டப்பட்டு கடுமையாக போராடி தான் இவர் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார். இருந்தும் தனித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் தான் இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் வாங்கினார். அதற்கு பிறகு கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றார்.

-விளம்பரம்-

மேலும், இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக அதனுடைய மீடியா பயணத்தை தொடங்கினார். ரேடியோ ஜாக்கியாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். அதற்குப் பிறகு சென்னையில் உள்ள big-fm-ல் வேலைக்கு சேர்ந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர் ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்தார்.

- Advertisement -

ஆர் ஜே பாலாஜி திரை பயணம்;

இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும், எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார். வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டியுள்ளார் பாலாஜி. இந்த படத்தை பிரபு இயக்கினார். கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார்.

ஆர் ஜே பாலாஜி நடித்த படங்கள்:

இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் மூலம் பாலாஜிக்கு இன்னும் பல ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆர் ஜே பாலாஜி இயக்கும் புதிய படம்:

சமீபத்தில் தான் ஆர் கே பாலாஜி இயக்கும் புதிய படத்தை பற்றிய தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் சிவானி நாராயணன் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஷிவானி சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கிறார். இந்த படம் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும். இதுமட்டுமில்லாமல் இவர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரன்னிங் கமெண்ட் பேசி வருகிறார்.

வைரலாகும் ஆர் ஜே பாலாஜியின் லேட்டஸ்ட் புகைப்படம்:

இந்த நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ஆர் ஜே பாலாஜி தற்போது புதிய Mini Cooper கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதன் விலை 40 லட்சத்திற்கு மேல் இருக்குமாம். மேலும், அவர் தனது மனைவியுடன் புதிய கார் முன்பு எடுத்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து பலரும் ஆர் ஜே பாலாஜிக்கு வாழ்த்துக்களையும், இவர் தான் உங்கள் மனைவியா? என்று கேட்டும் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆர் ஜே பாலாஜியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement