தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகங்கள் கொண்டு திகழ்கிறார். இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி இருந்தார். பின் இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார்.
பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார். வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டி இருந்தார் பாலாஜி. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
வீட்ல விசேஷம் படம்:
இந்த படத்திற்கு பிறகு தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பதாய் ஹோ’ படத்தின் ரீமேக். இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதை தமிழில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் எடுத்து இருக்கிறார்கள்.
ஆர் ஜே பாலாஜி படங்கள் குறித்த சர்ச்சை:
இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலாஜி அவர்கள் ஓரினச் சேர்க்கையாளராக படத்தில் நடிக்க ஆசை என்று கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, ஆர் ஜே பாலாஜி படம் என்றாலே சர்ச்சைக்குரிய ஒன்றாகவே மாறிவிட்டது.
ஆர் ஜே பாலாஜி அளித்த பேட்டி:
இவர் இயக்கி நடித்த எல்கேஜி படம் முதல் மூக்குத்தி அம்மன் படம் வரை பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தது. அந்த வகையில் தற்போது ஆர்ஜே பாலாஜி நடித்திருக்கும் வீட்ல விசேஷம் படமும் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் gay குறித்து கூறி இருந்தது, மாடன் லவ் என்ற ஒரு சீரிஸ் பார்த்தேன். அதை பார்த்து நான் மிகவும் வியந்து விட்டேன். ரொம்ப அழகான ஓரின சேர்க்கையாளர்களின் காதலை காண்பித்து இருந்தார்கள். அதை பார்க்கும் போது அடடா என்று இருந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
ஓரினசேர்க்கையாளர் குறித்து பாலாஜி சொன்னது:
அந்த ஒரு விஷயத்தை படமாக பண்ணனும் என்று ஆசை. ஓரினச்சேர்க்கையாளர் என்றாலே ‘ஹான் ஹான்னு’ காட்டி தவறான ஒரு எண்ணத்தை மனதில் திணித்து விட்டார்கள். அவர்களுக்குள் இருக்கிற நல்ல விஷயங்கள் இப்பதான் வெளியில் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வருகிறார்கள். நான் அவர்களை பெருமைப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுடைய எண்ணங்களையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். நான் இப்பதான் வளர்ந்து இருக்கிறேன். அதனால் இவன் படம் நன்றாகத்தான் இருக்கும் என்று மக்கள் ஒத்துக்க கொண்ட போது நான் கண்டிப்பாக இந்த மாதிரி ஓரினசேர்க்கையாளர் படத்தை பண்ணுவேன் என்று கூறி இருக்கிறார்.