சமீபத்தில் வெளியாகி இருக்கும் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நெட்டிசன்கள் பலர் நெல்சனை கலாய்த்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பீஸ்ட் படத்திற்கு பின்னர் மேடையில் பேசிய நெல்சனின் வீடியோவை கண்டு ரசிகர்கள் பலரும் தன்னை கேலி செய்வதால் தான் நெல்சன் இப்படி ஆகிவிட்டார் என்று கூறி வருகின்றனர். நெல்சன் இறுதியாக இயக்கிய பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் அவரை பலரும் கலாய்த்து தள்ளினர். இப்படி ஒரு நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் நெல்சனை கலாய்த்து பல விதமான மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் இயக்கிய அணைத்து படங்களும் வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்து இருக்கிறது. இதனால் லோகேஷுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆனால், லோகேஷ் கனகராஜை பாராட்டி வருவதை விட பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சனை குறிப்பிட்டு தான் பல மீம்கள் வந்து கொண்டு இருக்கிறது.
நெல்சன் கேலிகள் :
இப்படி ஒரு நிலையில் நெல்சனை கேலி செய்வது குறித்து ஆர் ஜே பாலாஜி பதிவு ஒன்றை போட்டுள்ளார். தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம்.
வீட்ல விஷேஷம் :
இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் புரமோஷனை படு வித்தியாசமாக கையாண்டு கொண்டு இருக்கிறார் ஆர் ஜே பாலாஜி.
நெல்சனை கேலி செய்த நெட்டிசன் :
பல வீட்டு விசேஷங்களுக்கு அழையா விருந்தாளியாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்து தன் படத்தை ப்ரோமோஷன் செய்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. அந்த வகையில் இந்த படத்தின் promotion காக பேட்டி ஒன்றில் பங்கேற்றார் பாலாஜி. அதை பார்க்கும் போது பீஸ்ட் படத்திற்கு முன்னர் அரபிக் குத்துவிற்காக நெல்சன் செய்த ப்ரோமோஷன் போல இருந்தது. அந்த வீடியோவை கண்ட ரசிகர் ஒருவர் ‘இதே மாதிரி Funny’ah தான் Song announcement வீடியோலாம் பண்ணுனாரு நம்ம நெல்சன்…அடேய் நெல்சா’ என்று பதிவிட்டு இருந்தார்.
ஆர் ஜே பாலாஜி பதிலடி :
இதற்கு பதில் அளித்த ஆர் ஜே பாலாஜி “நெல்சன் மிகச் சிறந்த இயக்குநர். நான் அவருடன் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். நான் அவருடைய படங்களின் மிகப் பெரிய ரசிகன். அவர் மிகப் பெரிய திறமைசாலி, அவருடைய பயணம் நிச்சயம் அனைவருக்குமான முன்மாதிரி. நான் நிச்சயமாக சொல்கிறேன்.. வரும் காலத்தில் அவருடைய படங்கள் நிச்சயம் நமக்கு அதிகப்படியான சந்தோஷத்தை தரப்போகிறது. ஆகையால் இதை நிறுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.