ஏன் நீங்கள் ஹிந்தியில் பேசவில்லை என்று நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆர்.ஜே.பாலாஜி கொடுத்து இருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஆர் ஜே பாலாஜி திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிகர், வானொலி ஒலிபரப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் கோவையில் ஊடகவியல் தொடர்பான படிப்பில் டிப்ளமோ பட்டம் பெற்றவர். பின் இவர் ரேடியோ மிர்ச்சி அலைவரிசை மூலமாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி இருந்தார்.
ரேடியோ ஜாக்கியாக ஆர் ஜே பாலாஜி தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இருந்தார். அதற்குப் பிறகு தான் பாலாஜி சென்னையில் உள்ள big-fm-ல் வேலைக்கு சேர்ந்து இருந்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் ஆர் ஜே பாலாஜி சினிமாவிற்குள் நுழைந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தான் நடித்து வந்தார். பின் தன்னுடைய கிண்டல் கேலித்தனமான நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
ஆர் ஜே பாலாஜி நடித்த படங்கள்:
அதன் பின் எல்கேஜி படத்தின் மூலம் தான் ஆர் ஜே பாலாஜி கதாநாயகனாக தோன்றினார். வெறும் அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இதனை எடுக்காமல் கொஞ்சம் சமூக கருத்தினையும் புகட்டி இருந்தார் பாலாஜி. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் பின் பாலாஜிக்கு இன்னும் பல ரசிகர் கூட்டம் சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து இவர் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார்.
ஆர் ஜே பாலாஜி நடிக்கும் படம்:
இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் ஆர் கே பாலாஜி இயக்கும் புதிய படத்தை பற்றிய தகவல் வெளியாகி இருந்தது. அந்த புதிய படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் சிவானி நாராயணன் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது ஆர்ஜே பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தி திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.
இதையும் பாருங்க : ‘ Foreign tour கேட்டனே கூட்டிட்டு போனயா’ – லோகேஷ்க்கு கமல், கார் பரிசளித்ததை தொடர்ந்து இணையத்தில் வைரலாகும் நெல்சன் மீம்ஸ்.
வீட்ல விசேஷம் படம்:
இந்த படம் 220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இதன் தமிழ் ரீமேக் படம் தான் வீட்ல விசேஷம். இந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி, நடித்து இருக்கிறார்.
இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்து இருக்கிறார். மேலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்து உள்ளனர். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் வீட்ல விசேஷம் படம் குறித்து பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்டு இருந்தார்கள். அதில் ஒருவர்,
ஹிந்தி மொழி குறித்து ஆர் ஜே பாலாஜி சொன்னது:
இந்தி படம் எடுக்கிறீர்கள் இந்தி பேச மாட்டீர்களா? என்று கேட்டிருந்தார். அதற்கு ஆர் ஜே பாலாஜி கூறியிருந்தது, இந்தி மொழி பேசக் கற்றுக் கொள்கிறேன். நான் இந்தியை பேச வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் தெலுங்கு, இந்தி, கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள். அதுவும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுக்கு பிடித்த மொழியை கற்றுக் கொள்ளுங்கள். நான் படம் பண்ணி விட்டேன் என்பதற்காக நான் இந்தி மொழியை கற்று கொள்ள மாட்டேன். எனக்கு பிடித்து இருந்தால் நான் இந்தி மொழியை கற்றுக் கொள்கிறேன். பிற மொழிகளை கற்றுக் கொள்வது நமக்கு ஒரு பலம். மதத்தை கட்டாயப்படுத்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லவில்லை என்று கூறியிருந்தார்.